மாற்றுத் திறனாளிகளுக்கான 8-ஆவது அகில இந்திய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் புதன்கிழமை தொடங்கின.
இந்தப் போட்டிகளை தொழிலதிபர் எச்.வசந்தகுமார் தொடங்கி வைத்தார்.
சென்னை நேரு பூங்காவில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மைய நிறுவனர் என்.ஆர்.தனபாலன் கூறியது:
சர்வதேச அளவில் விளையாட்டு வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளைப் புரிந்த, இந்திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவர் மறைந்த பா.சிவந்தி ஆதித்தனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் போட்டிகள் நடைபெறுகின்றன.
அரிமா மாவட்டம் 324ஏ5, அகில இந்திய மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு மையம் ஆகியவை இணைந்து இந்தப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதில் தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து உள்ளிட்ட 50 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்தப் போட்டிகளில், இந்தியா முழுவதிலுமிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.26) வரை நடைபெறும்.
சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர்களும் இந்தப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
போட்டிகளின் இறுதியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சிவந்தி ஆதித்தனார் நினைவுச் சுழல்கோப்பை வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment