FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, September 15, 2014

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல் நிலைத் தேர்வுக்கு பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சியை தமிழக அரசு அளிக்கவுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெறுவது அவசியமாகும். நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட குடிமைப் பணிகளில் தேர்ச்சிப் பெற மூன்று வகையான தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவை முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

தமிழகத்தில் குடிமைப் பணிகளுக்கான தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, குடிமைப் பணித் தேர்வுக்கான முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் இந்தப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. விடுதியில் தங்கி முழுநேரமும் பயிற்சி பெறுவோருக்கென 225 இடங்களும், மாலை நேரம் மட்டும் பயிற்சி பெறுவோருக்காக 100 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சியில் சேருவதற்கு குறைந்தபட்ச வயது வரம்பு 21 ஆகவும், அதிகபட்ச வயது 32 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் ஆகியோருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் உச்ச வயது வரம்பில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

நுழைவுத் தேர்வு: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள முதல் நிலைத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்போரைத் தேர்வு செய்வதற்கான நுழைவுத் தேர்வு நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்களை அக்டோபர் 14-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று பயிற்சி நிலையத்தின் தலைவர் வெ.இறையன்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்களது ஜாதி, வயது, பட்டப் படிப்பு சான்றுகளின் நகல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அளிக்க வேண்டும். நுழைவுத் தேர்வுக்கான உரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அந்த அலுவலகத்திலேயே ஒப்படைக்க வேண்டும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள குடிமைப் பணித் தேர்வு பயிற்சி மையத்தில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

சென்னை, கடலூர், கோவை, தருமபுரி, சேலம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம் ஆகிய மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

பாடத் திட்ட விவரம்: கொள்குறி வகைகளில் கேள்விகள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்திய வரலாறு, இந்திய தேசிய இயக்கம், இந்திய - உலக புவியியல், இந்திய அரசியலமைப்பு-நிர்வாக முறை உள்ளிட்ட பல்வேறுப் பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வுக்கான சீட்டுகள் பயிற்சி மையத்தின் இணையதளத்தில் (www.civilservicecoaching.com) பதிவேற்றம் செய்யப்படும். மேலும், விவரங்களைப் பெற 044-2462 1475 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment