FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Thursday, September 4, 2014

பின்னடைவு ஆசிரியர் காலிப் பணியிடங்கள்: நிரப்பக் கோரி மாற்றுத் திறனாளிகள் மனு

சென்னை, 04 September 2014
ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள 1,107 பின்னடைவுப் பணியிடங்களை நிரப்பக் கோரி, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு, 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள், கவனிப்பாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.நம்புராஜன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்: உச்ச நீதிமன்றம்- உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 4-ஆம் தேதி ஒரு அரசாணை வெளியிட்டது. அதில், பல்வேறு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகள் மூலம் நிரப்ப வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி பட்டதாரி ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்வது தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதனால், மாற்றுத் திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பிய பிறகு, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான புதிய அறிவிப்பை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment