FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Thursday, September 4, 2014

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம்

சென்னை, 04.09.2014
மெடிந்தியா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம், ஊட்டச்சத்துகள் குறித்த கண்காட்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மருத்துவ முகாமை சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி தொடங்கி வைத்துப் பேசியது:

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக முதல்வர் ஜெயலலிதா பல்வேறுத் திட்டங்களைக் கொண்டுவந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறார். வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக இதுவரை ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். தொண்டு நிறுவனங்களும்,மெடிந்தியா போன்ற அறக்கட்டளைகளும் அரசுக்கு ஒரு பாலமாக விளங்குகின்றன.

மாற்றுத்திறனாளிகள் கடந்த காலம் முதல் தற்போது வரை கல்வி, விளையாட்டு, வேலைவாய்ப்பு, சுயதொழில் என பல்வேறு துறைகளிலும் வியத்தகு முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உடலில் உள்ள குறையை பொருட்படுத்தாமல் மனதில் உறுதிகொண்டு போராடினால் உங்கள் இலக்கை நிச்சயம் அடைய முடியும் என்றார். அதையடுத்து மெடிந்தியா மருத்துவமனை அறக்கட்டளையின் தலைவர் டாக்டர் டி.எஸ்.சந்திரசேகர் பேசியது: இந்த அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றோர், மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனுடைய பள்ளிக் குழந்தைகளுக்கு இதுவரை 78 இலவச மருத்துவ முகாம்கள், 28 பொதுசுகாதாரம் குறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் மாணவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, ரத்தசோகை, கொழுப்பு, புரதச் சத்து குறைபாடுகளைக் கண்டறிதல் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். மாற்றுத்திறனுடைய குழந்தைகள் நலனுக்காக அரசின் ஒத்துழைப்போடு மேலும் புதிய திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளோம் என்றார் அவர்.

அதையடுத்து ஊட்டச் சத்துகளின் அவசியம், பொது சுகாதாரம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பிரெய்லி அட்டைகளை பார்வைக்குறைபாடுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளர் பி.சிவசங்கரன், மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் கே.மணிவாசன், செயிண்ட் லூயி காது கேளாதோர், பார்வையற்றோர் பள்ளி, டாக்டர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளி, சிறிய மலர் காதுகேளாதோர் பள்ளி உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment