FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, September 24, 2014

வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை மாற்றுதிறனாளி பெண் வன்புணர்வு - நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல்!

22.09.2014, தஞ்சாவூர்:
தஞ்சையில் மாற்றுத் திறனாளி பெண்ணை வன்புணர்வு செய்த நான்குபேர் கொண்ட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்ப்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சை கீழவாசல் சின்னையாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அப்துல்அஜீத். இவரது மகள் பானு (32). மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர், மிகவும் ஏழை)இவரை நேற்றுமுன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்திச் சென்று ஒரத்தநாடு பகுதியில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பானுவின் உடல்நிலை மிகவும் மோச மாகி விட்டது. எனவே சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து சுமார் 50 க்கும் மேற்பட்டோர் தஞ்சை கீழவாசல் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறவினர்களிடம் உறுதி கூறியதைத் தொ டர்ந்து மறியல் போராட்டத்தை கை விட்டனர். மேலும் இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி கால்வதுறையிடம் பானுவின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

No comments:

Post a Comment