FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, September 2, 2014

காது கேட்காது, வாய் பேச முடியாது எஸ்.எம்.எஸ்.சில் காதல் வளர்த்து கரம்பிடித்த மாற்றுத்திறன் ஜோடி: பாதுகாப்பு கேட்டு கலெக்டரிடம் தஞ்சம்

01.09.2014, சேலம்:
 சேலத்தில் வாய் பேச முடியாமலும், செவித்திறன் இல்லாமலும் எஸ்.எம்.எஸ் மூலம் காதல் வளர்த்த அபூர்வ ஜோடி, பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் நடந்தது. தர்மபுரி மாவட்டம் பெரியான்பட்டியை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சென்னையன் (24). திருவண்ணாமலை மாவட்டம் பேளூர் குசால்பேட்டை பகுதியை சேர்ந்த பாலசுந்தரம் மகள் பாரதி (24). பிறப்பால் இவர்கள் இருவரும் காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த ‘சைகையை‘ மட்டுமே நம்பியிருந்த இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வேலூர் மாவட் டம் வாணியம்பாடியில் உள்ள சிறப்புப் பள்ளியில் மேல்நிலை பள்ளிப் படிப்புக்காக சேர்ந்தனர். அப்போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது. இதனை, செல்போனில் எஸ்.எம்.எஸ். வளர்த்து வந்துள்ளனர்.

இதில் பாரதி, பி.காம். படித்துவிட்டு சென்னையில் பணியாற்றுகிறார். அவரது தங்கைக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. தனக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யாமல் தங்கைக்கு திருமணம் நடத்தப்பட்டது குறித்து சென்னையனுக்கு பாரதி எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளனர். அவரது கவலையை உணர்ந்து பதில் எஸ்எம்எஸ்சை அனுப்பிய சென்னையன், நாம் மணம் முடிப்பதற்கான தருணம் இது என்பதையும் தெரிவித்துள்ளார். நண்பர்களின் துணையு டன் கடந்த வாரத்தில் காதலியின் கரம் பிடித்தார் சென்னையன். சேலம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நண்பர்கள் வாழ்த்த இவர்களது திருமணம் நடந்து முடிந்தது. இருவர் வீட்டிலும் இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. நண்பர்கள் வீட்டில் தங்கிய இருவரும் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.

No comments:

Post a Comment