01.09.2014, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து திருவண்ணாமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வர நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வேலூர் ராயல் அக்ரோ டெய்ரி நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.தியாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் எம்.நிர்மலா வரவேற்றார்.
தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் தீபக் கலந்து கொண்டு சுயம்வர நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட ஆண், பெண் மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இவர்களில் இருந்து 18 ஜோடியினர் தங்களது வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தனர்.
இவர்களுக்கு 48 வகையான சீர்வரிசைப் பொருள்கள், ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகைப் பொருள்கள், 4 கிராம் தங்கம் ஆகியவற்றை அமைப்பின் சார்பில் வழங்கி அக்டோபர் மாதத்தில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment