முசிறி: முசிறியில் இரவு நேரத்தில் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஆடு திருடன் என்று 4 பேர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுமார். இவர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார். இயற்கை உபாதை: கடந்த மூன்றாம் தேதி இரவு தும்பலத்தில் உள்ள வங்கியின் பின்புறம் வயல்வெளியில் இயற்கை உபாதையை கழிக்க இருட்டான பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அடித்து உதைத்த ஊர்க்காரர்கள்: அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நடராஜன் , மணி , மனோகரன் மற்றும் சேகர் ஆகியோர் பாலகுமாரை ஆடு திருட வந்ததாக நினைத்து அசிங்கமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை: இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பால குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். நான்கு பேர் கைது: இது பற்றி பாலகுமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகுமாரை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஆடு திருடனாக நினைத்து தாக்குதல்: ஊனமுற்ற இளைஞரை ஆடு திருட வந்ததாக நினைத்து தாக்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment