புதுச்சேரி, 29 September 2014
புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற கோரிக்கை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பின்படி, உலக காதுகேளாதோருக்கான வாரம் செப்டம்பர் 26 முதல் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது.
இதில் அனைத்து அரசுத் துறைகளில் செய்கை மொழி பெயர்ப்பாளர் பணியிடம் உருவாக்கவும், காது கேளாதோருக்கான ஒரு சதவீத இடஒதுக்கீட்டை அரசு மற்றும் தனியார் பணியிடங்களில் உறுதி செய்திடவும், இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு மறுக்கப்பட்டு வரும் ஓட்டுநர் உரிமம் கிடைத்திடவும், காது கேளாதோருக்கான தனி வேலை வாய்ப்பு முகாமை அரசு நடத்த வேண்டும்.
புதுச்சேரியில் சிறப்பு ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஊர்வலத்தின்போது வலியுறுத்தப்பட்டன.
சங்கத் தலைவர் ஆர்.சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் பி.ஜி.பாலமுருகன் வரவேற்றார். சமூக நலத்துறை இயக்குநர் கே.உத்தமன் பேரணியைத் தொடங்கி வைத்தார். சமூக ஆர்வலர் வெ.பெருமாள் சிறப்புரை ஆற்றினார்.
கார்கில் நினைவுச் சின்னத்தில் தொடங்கிய பேரணி, டூப்ளே சிலை அருகே முடிவடைந்தது.

No comments:
Post a Comment