திருப்பதி, 12 September 2014
திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்தார்.
திருமலை ஏழுமலையானுக்கு இந்த மாதம் 26-ஆம் தேதி முதல் வருடாந்திர பிரம்மோத்ஸவம் தொடங்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை தேவஸ்தான அனைத்துத் துறை அதிகாரிகளும் செய்து வருகின்றனர்.
அந்த ஏற்பாடுகளை, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ வியாழக்கிழமை பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியது:
ஏழுமலையான் கோயில் அக்னி மூலையில் இருந்த, ஸஹஸ்ர தீபாலங்கார
மண்டபம் இடப்பற்றாக்குறையால் அகற்றப்பட்டு, 100 மீட்டர் தள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழுமலையான் கோயில் முன் ஏற்பாடு செய்யப்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான காத்திருப்பு வரிசை, தெற்கு மாடவீதிக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வரிசை, பல மணி நேரம் நின்று ஏழுமலையானை தரிசிக்க முடியாதவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால், இந்த வரிசையில் சிறு சிறு அங்கக் குறைபாடு உள்ளவர்களும் தரிசனத்துக்கு வருகின்றனர்.
அதனால், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், மாற்றுத்திறனாளிகள், வயோதிகர்களின் தரிசன வரிசை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதன்படி நடந்து, தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார் அவர்.

No comments:
Post a Comment