FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Tuesday, April 28, 2015

Tamilnadu School Lab Assistant (tndge) Recruitment 2015 Application Form For 4360 Post

பள்ளிகளில் 4,362 ஆய்வக உதவியாளர் வேலை 10-ம் வகுப்பு படிப்பு தகுதி||4362-schools-Laboratory-assistant-job-Class-10-eligible

| கரூரில் 84 ஆய்வக உதவியாளர் பதவிக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க ஆர்வம் | Dinamalar

வேலை வேண்டுமா?- பாரத ஸ்டேட் வங்கிக்குத் தேவை 2,000 அதிகாரிகள் - தி இந்து

பாட்கோ அலுவலகத்தை மாற்றுத் திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம்||Patko-officePeople-with-disabilities-struggle-siege

ISLRTC NEWS



Moving a Committee


The Maryknoll Deaf Development Programme (DDP) and Krousar Thmey have established a Sign Language Committee to work at promoting a common sign language for Cambodia. This effort is funded by the Pre-College Education Network of the National Technical Institute for the Deaf in Rochester, New York. The office has been operating from the DDP building but it was decided to move operations to the Krousar Thmey campus. Much of the materials for the committee work moved earlier but finally today a truck came to move the desks and filing cabinets and other large furniture to Krousar Thmey.

Sunday, April 26, 2015

உயர்த்தி அறிவிக்கப்பட்ட உதவித்தொகை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

25.04.2015, புதுச்சேரி
உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

நடைமுறைக்கு வரும்
புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22–ந் தேதி முதல்–அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்–அமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு முதல்–அமைச்சர் ரங்கசாமி கூறினார்.

அனைத்து அறிவிப்புகளும்...
மேலும் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:–

கேள்வி:– பட்ஜெட் அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனவே?

பதில்:– அனைத்து அறிவிப்புகளும் வருகிற 2016ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்

| ஆய்வக உதவியாளர் பணி: மாவட்டத்தில் 12 மையங்களில் விண்ணப்பம் பதிவேற்றம் | Dinamalar

மாற்றுத் திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு: மன்னிப்பு கேட்டார் சிபிஎம் எம்எல்ஏ!

25.04.2015, திருவனந்தபுரம்: 
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. இளமரம் கரீம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம், காசர்கோடு நகரில் நேற்று நடந்த அரசு சாலை போக்குவரத்து கழக நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. இளமரம் கரீகம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கியதால்தான் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில், கே.எஸ்.ஆர்.டி.சி.யின் இழப்புகள் குறித்து பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் உணர்வுகளை பாதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கூறியவற்றில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனினும், அது நடந்திருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

Tax Relief To Family Members of Differently Abled


Press Information Bureau 
Government of India
Ministry of Finance
24-April-2015 17:39 IST

Tax Relief To Family Members of Differently Abled 

Section 80DD of the Income Tax Act, 1961, inter alia, provides for a deduction to an individual or HUF, who is a resident in India, and

• Incurs expenditure for the medical treatment (including nursing), training and rehabilitation of a dependant, being a person with disability; or

• Pays any amount to LIC or any other insurer in respect of a scheme for the maintenance of a disabled dependant.

The section provides for a deduction of fifty thousand rupees if the dependant is suffering from disability and one hundred thousand rupees if the dependant is suffering from severe disability.

“Dependant” in the case of an individual, has been defined to mean the spouse, children, parents, brothers and sisters of the individual or any of them, and in the case of a Hindu undivided family, a member of the Hindu undivided family, if such person is dependant wholly or mainly on such individual or Hindu undivided family for his support and maintenance.

In view of the rising cost of medical care and special needs of a differently abled person, Finance Bill, 2015 proposes to amend section 80DD of the Income-tax Act so as to raise the limit of deduction in respect of a person with disability from fifty thousand rupees to seventy five thousand rupees and in respect of a person with severe disability, from one hundred thousand rupees to one hundred and twenty five thousand rupees.

This was stated by Shri Jayant Sinha, Minister of State in Ministry of Finance in written reply to a question in the Lok Sabha today.

Saturday, April 25, 2015

Indore: 9 hearing impaired students to perform in Mauritius


They can't hear or talk, but their determination to overcome odds has made the world see and listen to them.

Nine hearing impaired students of Mook Badhir Sangathan of Indore will showcase their music and dance talent at an international platform.

The students — Manali Dangi, Radha Tharad, Phulmati Lamoriya, Jayanti Bhavasar, Bhagyaprakash Sharma, Ankit Vishwakarma, Sunil Patidar, Ravi Parekh and Sapan Jain — will represent India at the India-Mauritius Cultural Exchange programme, to be held in Mauritius on Friday.

The programme will be organised by the Federation of Disabled People's Organisation, Mauritius. The students will be performing seven to eight cultural acts at the three-day event.

These include solo and group dances, musical performances, mime act and a skit on how mobile phones have become an inseparable part of our lives.

Speaking to Hindustan Times, Monica Punjabi Verma of Mook Badhir Sangathan said, "Programmes like these are a great source of encouragement for the physically challenged. It provides them with a platform to prove that they are no less talented and boosts their confidence."

The students have been selected to represent the country in Mauritius on the basis of their talent by the Delhi-based All India Deaf Art and Cultural Society.

They were supported by the Indian Council of Cultural Relations.

It is not for the first time that the students will be performing at an international event.

"Not all students have performed internationally, but some among these nine have performed at Republic of Seychelles, an island nation, before.

In fact, all our students have showcased their talents at major cities of our country, namely Mumbai, Delhi and Hyderabad," said Monica, who has trained the children.

The students will be joined by their trainer Monica, interpreter Gaurav Verma and Rajkumar Punjabi. They will be returning to India on April 30.




ISLRTC NEWS



Friday, April 24, 2015

Deaf-initely noble

Smriti Nagpal, 24, is the founder of Atulyakala where deaf artists express themselves, illustrate their skills and create socially responsible products. She talks about her journey and projects so far.

“Sign language is sort of my mother tongue as I talk more with my hands than my mouth,” avers dynamic and passionate Smriti Nagpal, founder of Atulyakala, a social enterprise that empowers deaf artists through design partnership and creative collaborations. Her journey began when she was born into a family where both her elder siblings suffered from hearing impediments. “I have two older siblings, a brother and a sister, who are 10 years older than me and are deaf and mute by birth. But that didn’t stop me from communicating and exchanging my feelings, thoughts and emotions with them just like it happens in any other family. When I wanted to talk to them, my hands automatically started moving and soon these signs became an integral part of my life.”

Love, it is said, has no language and Smriti avows that her siblings are her biggest strength. “I love them a lot and it is only because of them that I am who I am today. I was never afraid or ashamed to introduce them to my friends when I was in school as they were my pillars.”

It is estimated that perhaps out of every five hearing impaired in the world, one lives in India, making it the country with the largest number of people with this disability. Despite the numbers, there are numerous problems faced by the community and Smriti who was witness to all of this especially through her siblings, at the age of 16 started volunteering at the National Association of Deaf, NAD and other NGOs as sign language interpreter to help people with special needs. Her passion grew even stronger from thereon and she earned a stint at the Hearing Impaired Morning Bulletin in the Doordarshan Network. Later she met her inspiration when she came across a deaf man doing manual work in an NGO who in actuality was a senior artist with a master’s degree in arts. “Unfortunately, he was working in an NGO doing manual work because people won’t employ him because of his impediment. I got upset after listening to his story as his talent was completely wasted.

I came back home and did some research and decided that I had to do something about helping artists who had hearing impediments. Hence, I decided to start Atulyakala,” recalls Smriti.

“Under the banner, we provide the deaf artists with a platform to express themselves, illustrate their skills and create a socially responsible brand that utilises their passion, as well as fosters interesting collaborations and garners awareness about the Indian Sign Language. We work on three parallels out of which one covers the commercial aspect wherein we work with several deaf and mute people who have bachelor’s and master’s degrees in arts design several products that are sold through our enterprise. Secondly, we work on several awareness campaigns where we vigorously work towards developing new forms of typography, gestures in the sign language arena along with finding ways to sensitise issues regarding people with disabilities through campaigns in collaborations with mainstream artists in India. We also organise events and workshops in major schools and colleges to bridge the gap between communities.

Thirdly, since we are a small enterprise and can’t employ large number of people to work for us so to empower people who are not our employees we have formed a community/forum and update several artists about the latest news from the market. Also, when Changelooms came into play in terms of providing us with help with funds as well as guidance, we understood the real value of marketing ideas.”

Besides receiving recognition for her work, Smriti had the chance to interpret the Republic Day Parade this year in sign language on national television for India’s deaf community. This was the first such broadcast in 64 years. Lastly she shares, “I am a hardcore dreamer and I’d like to tell everyone that we only get one life so live it to the fullest. So don’t stop believing and dreaming.”

India beat Sri Lanka in T20 Deaf Asia Cup


22.04.2015, LAHORE - Indian deaf cricket team Tuesday beat Sri Lankan team by 18 runs after a tough battle in the second match of the 1st Twenty20 Deaf Asia Cup 2015 being played here at the Lahore City Cricket Association (LCCA) ground. 

Indian captain Imran Sheikh won the toss and opted to bat first. They managed to score 128-6 in the allotted 20 overs. Indrajeet Yadav remained the most impressive batsman of the Indian team as he hammered unbeaten 68. Though the Indian team lost their first wicket at a total of 11 when Patel was sent to the pavilion but after that the Indian batsmen played sensible cricket and added 40 runs for the second-wicket partnership. At a total of 51, Indian team lost its second wicket when Parath Gujjar was playing at 20. Yadav then played aggressively and gathered some quick runs for his team, but on the other end, his teammates Imran Sheikh (1) and M Shoaib (8) lost their wickets cheaply. For the sixth-wicket partnership, Yadav and Kuldeep Singh added impressive 39 runs in their team’s total and after the completion of 20 overs, India managed to post 128-6 on the board. For Sri Lanka, Sanka Manjola took two wickets while Laksan Fernando, Somo Dolanka and Nalan Samera got one wicket each. 

Sri Lankan team’s start was not up to the mark as its batsmen adopted defensive approach which cost them dearly and they could manage to score 110-8 in the allotted 20 overs. For Sri Lanka, Somo Dolanka (9), Hemajith Wajera (19), Tharanka Simpath (13), Rajetha Asanka (12) and Laskan Fernando (12) batted well. Vipul Patel bowled brilliantly and managed to grab three wickets for the winners while Guru Baks Singh picked two and Guldeep and Lokesh Raval got one wicket each. 

Pakistan will take on Sri Lanka here Today (Wednesday) at Lahore City Cricket Association (LCCA) ground at 9am.

India to feature in T20 Asia Cup for deaf cricketers


New Delhi: India’s deaf cricket team is all set to compete in the Twenty20 Asia Cup to be held in Lahore from April 18 to 27. Usha International Ltd is the Indian team’s sponsor as the household consumer durable company on Thursday announced its association with the All Indian Cricket association for the Deaf to support the national team.

The Asia Cup is being organised by the Pakistan Deaf Cricket Association in collaboration with the Pakistan Cricket Board (PCB) is an effort to provide a platform to the differently-abled cricketers to showcase their skill and talent, overcoming their disability. Six teams including Sri Lanka, Nepal, Bangladesh, Pakistan and Afghanistan will compete against each other.

“Usha international is proud to be associated with such a wonderful endeavour. It is very heartening to see the differently-abled people rise above their disability and compete at such an international level tournament,” Komal Mehra, Events Head, Usha International said.

மாற்றுத் திறனாளி அண்ணனின் சிகிச்சை செலவுக்காக தெருவில் எலுமிச்சை பழச்சாறு விற்று ரூ.15 லட்சம் சேர்த்த 5 வயது சிறுமி || 5 year old girl raises 25000 usd selling lemonade for treatment of disabled brother

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: ஏப்ரல் 24 முதல் விண்ணப்பிக்கலாம்

22.04.2015, காஞ்சிபுரம் பள்ளிகளில் உள்ள 204 ஆய்வக உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் வருகிற 24 முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறியது: பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர்

பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில், வருகிற 24 முதல் மே 6-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 204 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும். 18 வயதுக்கு உள்பட்டவராகவும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) ஆகியோர் அதிகபட்சம் 32 வயதாக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு வயது வரம்பு சலுகைகள் நடைமுறையிலுள்ள அரசு ஆணைகள், விதிமுறைகளின்படி செயல்படுத்தப்படும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்),

பழங்குடியின வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் www.tndge.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றி அரசுத் தேர்வுகள் சேவை மையத்தில் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஆண் விண்ணப்பதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் அருகே சின்னகொலம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியிலும், பெண் விண்ணப்பதாரர்கள் தாம்பரம் சேலையூர் இந்திரா நகரில் உள்ள சீயோன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ. 100, சேவைக் கட்டணம் ரூ. 50 குறிப்பிட்ட சேவை மையங்களில் ரொக்கமாக செலுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பினர் கட்டணம் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

| சேலத்தில் 176 ஆய்வக உதவியாளர் பணியிடம்14 சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் | Dinamalar

Thursday, April 23, 2015

Differently abled stage demonstration - The Hindu

Differently abled persons oppose norms of railways - The Hindu

வேலை வாய்ப்பு உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

22.04.2015, கடலூர்: 
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த காலாண்டிற்கான உதவித் தொகைக்கான விண்ணப்படும் வழங்கப்பட உள்ளது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கும் மேலாக வேலைக்காக காத்திருக்கும் உடல் ஊனமுற்றஎஸ்.எஸ். எல்.சி., முடித்தவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், பிளஸ் 2விற்கு 375 ரூபாயும், பட்டப்படிப்பிற்கு 450 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற்றிட மனுதாரர் உடல் ஊனமுற்றவராகவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டிற்கு மேலாக பதிவு புதுப்பித்து வருபவராகவும், தொடர்ந்து படிப்பவராகவோ அல்லது வேலையில் இருக்கக்கூடாது. தகுதியுடையவர்கள் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.தகுதியின் அடிப்படையில் 10 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும்.ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. சுய உறுதிமொழி ஆவணம் மட்டும் சமர்பிக்க வேண்டும்.

இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரம் ரத்து

23.04.2015, புது டெல்லி
இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.

நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல், உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா (மாற்றுத்திறனாளிகள்) தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது வீரர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்காதது ஆகியவற்றின் எதிரொலியாக இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியை காலவரையறையின்றி கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தது சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி.

அதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய விளையாட்டு அமைச்சகம், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக்கேட்டு இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை நேற்று தற்காலி கமாக ரத்து செய்து உத்தர விட்டுள்ளது மத்திய விளை யாட்டு அமைச்சகம். பாரா ஒலிம்பிக் கமிட்டியானது, வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவில்லை. அதனால் வீரர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

அங்கீகாரம் தொடர்பான விதி முறைகளையும், தனது சொந்த விதிமுறைகளையும் பாரா ஒலிம்பிக் கமிட்டி மீறியுள்ளதால் அதன் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Wednesday, April 22, 2015

AIFD is power and recognised by Govt


AIFD is power and recognised by Govt
Mr. Sibaji Panda, Vice President of All India Federation of the Deaf (AIFD). Now AIFD is recognised by Central Govt and affiliated by World Federation of the Deaf. But NAD is not recognised by Govt and NAD is not power. All India deaf should not fight and not argues without knowledge. Stop false, stop rumours. Please understand clearly.
Posted by Wonders of Indian Deaf Social Network on Wednesday, April 22, 2015


Mr. Sibaji Panda, Vice President of All India Federation of the Deaf (AIFD). Now AIFD is recognised by Central Govt and affiliated by World Federation of the Deaf. But NAD is not recognised by Govt and NAD is not power. All India deaf should not fight and not argues without knowledge. Stop false, stop rumours. Please understand clearly.

Tuesday, April 21, 2015

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானங்கள்

19.04.2015
நாமக்கல் அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் அரசு பணியிடத்தில் 3 சதவீத இட ஓதுக்கீட்டை உடனே அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும், சுயதொழில் தொடங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

Monday, April 20, 2015

TNSFD - வெற்றியில் ஒரு கொடி

19.04.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு மாநில காதுகேளாதோர் கூட்டமைப்பில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் காதுகேளாதோர் சங்கத்தில் இருந்தும் கலந்துக்கொண்டனர். இதில் முக்கிய ஆலோசனைகள், விவாதங்களுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளும் தீர்வுக்குப் பிறகு தேர்தல் நடந்தது. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தனர். காதுகேளாதோர் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றியில் ஒரு கொடி ஏற்றி மகிழ்ச்சியடைந்தனர்.



OFFER MERIT-BASED ADMISSION TO 50 STUDENTS WITH DISABILITIES FOR THE YEAR 2015-2016

CLICK HERE
FOR APPLICATION FORMS
http://www.abilityfoundation.org/employAbility_2015.html

இணையதள ரயில் சலுகை டிக்கெட் : சாத்தியமற்ற முறையை கைவிடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்..

இந்தியா முழுமையும் உள்ள மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்பினால் அதற்கான விண்ணப்ப படிவத்தில் மருத்துவரிடம் மாற்றுத்திறநாளி என்பதற்கான சான்றை இணைத்து நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சலுகை கட்டண டிக்கெட்டை பெற விரும்புபவர்கள் நேரடியாக ரயில் நிலையம் சென்றுதான் பெற வேண்டும். இந்த நடைமுறையால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர். இணையத்தின் வாயிலாக சலுகை கட்டண டிக்கெட் பெறுவதற்கு வழி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் எமது சங்கமும், எமது அகில இந்திய சங்கமாகிய ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையும் மத்திய அரசையும், இரயிவே அமைச்சகத்தையும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு இணையத்தில் வழங்கும் சலுகையைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கும் டிக்கெட் வழங்க வேண்டும் என கடந்த 5ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எமது சங்க கோரிக்கையை ஏற்று சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் அந்த முயற்சியை துவக்கியுள்ளதாக அறிவித்தது.வடக்கு ரயில்வேயில் பரிட்சார்த்த அடிப்படையில் இதனை தொடங்கியது.
மார்ச்-19ம் தேதியிட்டு சுற்றறிக்கை ஒன்றை நாட்டின் அனைத்து மண்டல இரயில்வே பொதுமேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இரயில்வே வாரியம் தற்போது அனுப்பியுள்ளது. அதில் நாடு முழுவதும் இந்த வசதியை விரிவுபடுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளார்கள். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்றுள்ள சலுகை சான்று, புகைப்படத்துடன் அடையாள சான்று வயது மற்றும் முகவரி சான்று, இரண்டு புகைப்படங்கள் – இவைகளில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறநாளி சொந்த கையெழுத்திட்டு ( SELF ATESTED ) சம்மந்தப்பட்ட இரயில்வே கோட்ட மொத்த வர்த்தக மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு விசேட அடையாள அட்டை மற்றும் விசேட எண் தருவார்கள். அதனை கொண்டு இணையதளத்தில் சலுகை கட்டண முன்பதிவு டிக்கெட்டும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை ரயில் நிலைய கவுண்டர்களும் பெறலாம்.
நமது நாட்டில் பல கோடிக்கணக்கான , பல வகையான உடல் குறைபாட்டுடன் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள் கிராமப்புறங்களிலும் போக்குவரத்து வசதியற்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இரயில் நிலையங்களுக்கே பல கி.மீ.தூரம் செல்ல வேண்டிய நிலைமை. இப்படிப்பட்ட சூழலில் கோட்ட இரயில்வே அலுவலகங்களுக்கு வரச்சொல்லி விண்ணப்பிக்க சொல்வது அவர்களை மேலும் அலைக்கழிக்கிற வேலையாக உள்ளது. அதிலும் குறிப்பாக சம்மந்தப்பட்ட மாற்றுத்திறநாளி ஒருமுறை அல்ல இருமுறை இரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு வரச்சொல்வது கொடுமையிலும் கொடுமை. விண்ணப்பம் வாங்க ஒருமுறை, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்து விசேட எண் வாங்க ஒருமுறை என மாற்றுத்திறனாலிகளை அலைக்கழிப்பது கொடுமையிலும் கொடுமை. தற்பொழுது முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு இணையத்தில் சலுகை கட்டண டிக்கெட் பெற வழிவகை உள்ளது. அவ்வாறு சலுகை கட்டண பயணச்சீட்டு பெரும் இவர்கள் இரயில் பயணத்தின்போது அதற்கான ஆவணங்களை காண்பித்தால் போதும் என உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இந்த கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதை எங்களது சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இரயில்வே நிர்வாகத்தின் இந்த மாற்றுத்திறனாளி விரோத போக்கை கண்டித்தும், முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உள்ளதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையத்தில் சலுகை கட்டண பயணசீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் எங்களது சங்கத்தின் சார்பில் மதுரை, திருச்சி, சேலம், சென்னை ஆகிய நான்கு இரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பாக தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளை திரட்டி வருகிற 22.04.15 அன்று காலை 10.00 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திரனாளிகள் பங்கேற்க உள்ளனர் என்பதை இதன்மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம். 


திருமலையில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் வரிசையில் வருகிறது மாற்றம்

18.04.2015, திருப்பதி:
திருமலையில், மூத்த குடிமக்கள் வரிசையில், தேவஸ்தானம், மாற்றம் கொண்டு வர உள்ளது.திருமலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், காலை, 10:00 மணி, மதியம், 3:00 மணிக்கு, தனி வரிசை மூலம், கோவில் முன் வாசல் வழியாக, ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, அவர்களின் காத்திருப்பு வரிசை, கோவில் வடக்கு மாட வீதியில் உள்ளது. அதனால், அவர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு, வெகுதூரம் நடந்து செல்கின்றனர்.இதை தவிர்க்க, தேவஸ்தானம், அவர்களை, சஹஸ்ர தீபாலங்கார மண்டபம் எதிரில் உள்ள, அவசர வாசல் வழியாக, கோவிலுக்குள் அனுப்ப, முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களின் தரிசன நேரங்களில், தற்காலிக தரிசன வரிசை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கோவிலுக்குள் அனுப்ப, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையில் 569 பணி


இந்திய அஞ்சல் துறையில் ஒடிசா அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள 569 Postmaster, Mail Deliverer, Stamp Vendor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Indian Postal Circle, Odisha

காலியிடங்கள்: 569

பணி:
1. Gramin Dak Sevak Branch Postmaster

2. Gramin Dak Sevak Mail Deliverer

3. Gramin Dak Sevak Mail Carrier

4. Gramin Dak Sevak Mail Packer

5. Gramin Dak Sevak Stamp Vendor

6. Gramin Dak Sevak Mailman

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 14.04.2015 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக்க கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://odisha.postalcareers.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.05.2015

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.05.2015

மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கான முழுமையான விவரங்கள் அறிய http://odisha.postalcareers.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Click here

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் - தி இந்து

Wednesday, April 15, 2015

WFD Honorary President Dr Markku Jokinen

WFD Honorary President Dr Markku Jokinen participated as a the panelist for the Day of General Discussion on the right to education for persons with disabilities at the UNCRPD Committee, Geneva, Switzerland.


WFD Honorary President Dr Markku Jokinen participated as a the panelist for the Day of General Discussion on the right to education for persons with disabilities at the UNCRPD Committee, Geneva, Switzerland.
Posted by World Federation of the Deaf - Official on Wednesday, April 15, 2015

Tuesday, April 14, 2015

National Development Society for the Deaf (NDSD) - NEWS


National Development Society for the Deaf (NDSD)
Mr. V. Prasad, Founder of new "NATIONAL DEVELOPMENT SOCIETY FOR THE DEAF (NDSD)" will form early. All Over India Deaf States must attend to General Body Meeting, Hyderabad on August 2015 for 2 days (Saturday & Sunday) by National Platform for the Rights of the Disabled (NPRD) hosting. Free accommodation and foods facilities. NDSD will be justiced new PWD & RPWD for hearing disabled to be developing new matters. Mr. Baban Jayabhe (Maharashtra Leader) visited Mr. V. Prasad for responded. Thanks.
Posted by Wonders of Indian Deaf Social Network on Monday, April 13, 2015

Sunday, April 12, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இணையதளத்தில் சலுகை டிக்கட் வழங்க வேண்டும்: மாற்றுத் திறானாளிகள் சங்கம்

11.04.2015
முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ளது போல் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணத்தில் ரயில்டிக்கட் பெற மத்திய, மாநில அரசுகள் வசதி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறளானிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் தமிழ்நாடு அனைத்து வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்துப் பேசினார். மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜா, நிர்வாகிகள் ராமகுமார், எழில்நிலவன், வீரமணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலையில் அனைத்து கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம், மூன்று சக்கர வாகனம், நவீன கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்; கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க அரசாணைப்படி மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்; நகராட்சி மற்றும் பேரூராட்சி

பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யோக கழிப்பறைகள் இல்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Saturday, April 11, 2015

காது கேளாதோர் பள்ளி தலைமையாசிரியர் 'சஸ்பெண்ட்'

11.04.2015, காஞ்சிபுரம்: 
காஞ்சிபுரம் அரசு காது கேளாதோர் பள்ளியில்,கணினிகளை திருடி விற்றதாக எழுந்த புகாரின்பேரில்,பள்ளி தலைமையாசிரியர்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.காஞ்சிபுரம் அடுத்த சதாவரம் பகுதியில் உள்ளது, அரசுகாது கேளாதோர் பள்ளி.இந்த பள்ளியில், மாணவர்களின் நலனுக்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, பல்வேறு உபகரணங்கள்வழங்கப்படுகின்றன.பள்ளியில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது.அதன் அடிப்படையில்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் செந்தில்குமாரி, பள்ளியில் ஆய்வுசெய்துள்ளார்.அப்போது, பள்ளி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகளும், பள்ளியில் இருந்தகணினிகள் மாயமானதும் தெரிய வந்தது.இதையடுத்து, பள்ளிதலைமையாசிரியர் பாண்டியனை, மாவட்ட மாற்றுத்திறனாளி துறை அலுவலர்செந்தில்குமாரி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

10.04.2015
வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர்சித்திக் வெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் உள்பட அனைத்து இன பதிவுதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.

9ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதும் பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதி உடைய மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து உதவித்தொகைக்கான விண்ணப்பத்தைப் பெற்று மே 31ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர், தொடர்ந்து அதனைப் பெற சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள்:

மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த் துறை சான்று தேவையில்லை. ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்குப் புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் மே 31ம்தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது. ரத்து செய்யப்பட மாட்டாது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை.

Monday, April 6, 2015

மாற்றுத்திறனாளி குழந்தைகள் கணக்கெடுப்பு தொடங்கியது - District Dinakarn

இ-டிக்கெட் மூலம் ரயிலில் முன்பதிவு: மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை

சென்னை, 05 April 2015
இ-டிக்கெட் மூலம் ரயில் பயணத்துக்கு முன்பதிவு செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரயிலில் பயணம் செய்ய இ-டிக்கெட் எடுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய வசதியை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது. இதற்காக மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகலாம். இல்லையெனில், அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் வணிகப் பிரிவின் அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பலாம்.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் அடையாள அட்டை வழங்கும் தேதி அறிவிக்கப்படும். இந்த அடையாள அட்டையை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"இந்தியக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 0.56% மட்டுமே'

05.04.2015, புது தில்லி
நாட்டில் உள்ள 150 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் 15.21 லட்சம் மாணவர்களில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8,449 பேர் அதாவது 0.56 சதவீதம் பேர் மட்டுமே என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் ஜாவேத் அபிதி தெரிவித்ததாவது:

மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் கேட்டு, 200 கல்வி நிலையங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. அவற்றில் 16 ஐஐடிகள், 13 ஐஐஎம்கள் உள்பட 150 கல்வி நிலையங்கள் மட்டுமே பதிலளித்தன.

அந்தக் கல்வி நிலையங்களில் படிக்கும் 15,21,438 மாணவர்களில், வெறும் 8,449 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் என்று தெரிய வந்தது.

இது மொத்தம் உள்ள மாணவர்களில் 0.56 சதவீதம் மட்டுமே ஆகும்.

மாற்றுத் திறனாளி மாணவர்களில், எலும்பு முறிவுக் குறைபாடுள்ளவர்கள் 46.67 சதவீதமும், கண் பார்வை பாதிப்படைந்தவர்கள் 32.13 சதவீதமும், பேச்சு / செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 5.16 சதவீதமும், பிற குறைபாடுள்ளவர்கள் 16.05 சதவீதமும் அடங்குவர்.

1995ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில், வெறும் 0.5 சதவீதம் மட்டுமே உண்மையில் அமலாகிறது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏன் செல்வதில்லை? கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளும், அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.

இந்த ஆய்வை அரசு கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று ஜாவேத் அபிதி தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 0.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.