FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, April 6, 2015

"இந்தியக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 0.56% மட்டுமே'

05.04.2015, புது தில்லி
நாட்டில் உள்ள 150 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பயிலும் 15.21 லட்சம் மாணவர்களில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் 8,449 பேர் அதாவது 0.56 சதவீதம் பேர் மட்டுமே என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பு மேம்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குநர் ஜாவேத் அபிதி தெரிவித்ததாவது:

மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீடு பற்றிய விவரம் கேட்டு, 200 கல்வி நிலையங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. அவற்றில் 16 ஐஐடிகள், 13 ஐஐஎம்கள் உள்பட 150 கல்வி நிலையங்கள் மட்டுமே பதிலளித்தன.

அந்தக் கல்வி நிலையங்களில் படிக்கும் 15,21,438 மாணவர்களில், வெறும் 8,449 பேர் மட்டுமே மாற்றுத் திறனாளிகள் என்று தெரிய வந்தது.

இது மொத்தம் உள்ள மாணவர்களில் 0.56 சதவீதம் மட்டுமே ஆகும்.

மாற்றுத் திறனாளி மாணவர்களில், எலும்பு முறிவுக் குறைபாடுள்ளவர்கள் 46.67 சதவீதமும், கண் பார்வை பாதிப்படைந்தவர்கள் 32.13 சதவீதமும், பேச்சு / செவித்திறன் குறைபாடுள்ளவர்கள் 5.16 சதவீதமும், பிற குறைபாடுள்ளவர்கள் 16.05 சதவீதமும் அடங்குவர்.

1995ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு, 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த நிலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில், வெறும் 0.5 சதவீதம் மட்டுமே உண்மையில் அமலாகிறது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன.

கல்லூரிகளுக்கும், கல்வி நிலையங்களுக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் ஏன் செல்வதில்லை? கல்வி நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான போக்குவரத்து வசதிகளும், அடிப்படை வசதிகள் இல்லாததே இதற்கு காரணம்.

இந்த ஆய்வை அரசு கவனத்தில் கொண்டு, நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று ஜாவேத் அபிதி தெரிவித்தார்.

கடந்த ஆண்டில், மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 0.63 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment