25.04.2015, திருவனந்தபுரம்:
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ. இளமரம் கரீம் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம், காசர்கோடு நகரில் நேற்று நடந்த அரசு சாலை போக்குவரத்து கழக நிகழ்ச்சியின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. இளமரம் கரீகம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு சலுகை வழங்கியதால்தான் கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஆர்.டி.சி.) இழப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சுக்கு மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், தனது பேஸ்புக் சமூக வலைதளத்தில், கே.எஸ்.ஆர்.டி.சி.யின் இழப்புகள் குறித்து பேசும்போது, மாற்றுத்திறனாளிகள் உணர்வுகளை பாதிக்கும் வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். நான் கூறியவற்றில் உள்நோக்கம் எதுவும் இல்லை. எனினும், அது நடந்திருக்க கூடாது என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment