FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, April 20, 2015

இணையதள ரயில் சலுகை டிக்கெட் : சாத்தியமற்ற முறையை கைவிடக்கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம்..

இந்தியா முழுமையும் உள்ள மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணம் மேற்கொள்ள விரும்பினால் அதற்கான விண்ணப்ப படிவத்தில் மருத்துவரிடம் மாற்றுத்திறநாளி என்பதற்கான சான்றை இணைத்து நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சலுகை கட்டண டிக்கெட்டை பெற விரும்புபவர்கள் நேரடியாக ரயில் நிலையம் சென்றுதான் பெற வேண்டும். இந்த நடைமுறையால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வந்தனர். இணையத்தின் வாயிலாக சலுகை கட்டண டிக்கெட் பெறுவதற்கு வழி இல்லாமல் இருந்தது. இந்நிலையில் எமது சங்கமும், எமது அகில இந்திய சங்கமாகிய ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையும் மத்திய அரசையும், இரயிவே அமைச்சகத்தையும் தற்பொழுது நடைமுறையில் உள்ள சிறுவர்கள் மற்றும் முதியோருக்கு இணையத்தில் வழங்கும் சலுகையைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கும் டிக்கெட் வழங்க வேண்டும் என கடந்த 5ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எமது சங்க கோரிக்கையை ஏற்று சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் அந்த முயற்சியை துவக்கியுள்ளதாக அறிவித்தது.வடக்கு ரயில்வேயில் பரிட்சார்த்த அடிப்படையில் இதனை தொடங்கியது.
மார்ச்-19ம் தேதியிட்டு சுற்றறிக்கை ஒன்றை நாட்டின் அனைத்து மண்டல இரயில்வே பொதுமேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இரயில்வே வாரியம் தற்போது அனுப்பியுள்ளது. அதில் நாடு முழுவதும் இந்த வசதியை விரிவுபடுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சில வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளார்கள். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் ஏற்கனவே பெற்றுள்ள சலுகை சான்று, புகைப்படத்துடன் அடையாள சான்று வயது மற்றும் முகவரி சான்று, இரண்டு புகைப்படங்கள் – இவைகளில் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறநாளி சொந்த கையெழுத்திட்டு ( SELF ATESTED ) சம்மந்தப்பட்ட இரயில்வே கோட்ட மொத்த வர்த்தக மேலாளருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதனை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு விசேட அடையாள அட்டை மற்றும் விசேட எண் தருவார்கள். அதனை கொண்டு இணையதளத்தில் சலுகை கட்டண முன்பதிவு டிக்கெட்டும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளை ரயில் நிலைய கவுண்டர்களும் பெறலாம்.
நமது நாட்டில் பல கோடிக்கணக்கான , பல வகையான உடல் குறைபாட்டுடன் வாழ்ந்து வரும் மாற்றுத்திறனாளிகள் கிராமப்புறங்களிலும் போக்குவரத்து வசதியற்ற பகுதிகளிலும் வாழ்கின்றனர். இரயில் நிலையங்களுக்கே பல கி.மீ.தூரம் செல்ல வேண்டிய நிலைமை. இப்படிப்பட்ட சூழலில் கோட்ட இரயில்வே அலுவலகங்களுக்கு வரச்சொல்லி விண்ணப்பிக்க சொல்வது அவர்களை மேலும் அலைக்கழிக்கிற வேலையாக உள்ளது. அதிலும் குறிப்பாக சம்மந்தப்பட்ட மாற்றுத்திறநாளி ஒருமுறை அல்ல இருமுறை இரயில்வே கோட்ட அலுவலகத்திற்கு வரச்சொல்வது கொடுமையிலும் கொடுமை. விண்ணப்பம் வாங்க ஒருமுறை, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்து விசேட எண் வாங்க ஒருமுறை என மாற்றுத்திறனாலிகளை அலைக்கழிப்பது கொடுமையிலும் கொடுமை. தற்பொழுது முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு இணையத்தில் சலுகை கட்டண டிக்கெட் பெற வழிவகை உள்ளது. அவ்வாறு சலுகை கட்டண பயணச்சீட்டு பெரும் இவர்கள் இரயில் பயணத்தின்போது அதற்கான ஆவணங்களை காண்பித்தால் போதும் என உள்ளது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் இந்த கடுமையான நிபந்தனைகளை விதித்திருப்பதை எங்களது சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இரயில்வே நிர்வாகத்தின் இந்த மாற்றுத்திறனாளி விரோத போக்கை கண்டித்தும், முதியோர் மற்றும் சிறுவர்களுக்கு உள்ளதுபோல் மாற்றுத்திறனாளிகளுக்கும் இணையத்தில் சலுகை கட்டண பயணசீட்டு வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் எங்களது சங்கத்தின் சார்பில் மதுரை, திருச்சி, சேலம், சென்னை ஆகிய நான்கு இரயில்வே கோட்ட அலுவலகங்கள் முன்பாக தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளை திரட்டி வருகிற 22.04.15 அன்று காலை 10.00 மணிக்கு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திரனாளிகள் பங்கேற்க உள்ளனர் என்பதை இதன்மூலமாக தெரிவித்துக்கொள்கிறோம். 


No comments:

Post a Comment