23.04.2015, புது டெல்லி
இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது மத்திய விளையாட்டு அமைச்சகம்.நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல், உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான பாரா (மாற்றுத்திறனாளிகள்) தடகள சாம்பியன்ஷிப் போட்டியின்போது வீரர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்காதது ஆகியவற்றின் எதிரொலியாக இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியை காலவரையறையின்றி கடந்த வாரம் சஸ்பெண்ட் செய்தது சர்வதேச பாரா ஒலிம்பிக் கமிட்டி.
அதைத் தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மத்திய விளையாட்டு அமைச்சகம், உங்களின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக்கேட்டு இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில் இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டியின் அங்கீகாரத்தை நேற்று தற்காலி கமாக ரத்து செய்து உத்தர விட்டுள்ளது மத்திய விளை யாட்டு அமைச்சகம். பாரா ஒலிம்பிக் கமிட்டியானது, வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவில்லை. அதனால் வீரர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
அங்கீகாரம் தொடர்பான விதி முறைகளையும், தனது சொந்த விதிமுறைகளையும் பாரா ஒலிம்பிக் கமிட்டி மீறியுள்ளதால் அதன் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது என விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment