FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, April 11, 2015

நெல்லை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

10.04.2015
வேலைவாய்ப்பு அலுவலர் அபுபக்கர்சித்திக் வெளியிட்டுள்ள செய்தி: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் உள்பட அனைத்து இன பதிவுதாரர்களும் விண்ணப்பிக்கலாம்.

9ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள், பள்ளியிறுதி வகுப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40 வயதும் பூர்த்தி அடைந்திருக்கக்கூடாது.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருக்கக் கூடாது. தகுதி உடைய மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச்சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து உதவித்தொகைக்கான விண்ணப்பத்தைப் பெற்று மே 31ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஏற்கெனவே உதவித்தொகை பெற்று வருவோர், தொடர்ந்து அதனைப் பெற சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகள்:

மாற்றுத் திறனாளிகள் தங்கள் கல்வித் தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். அசல் கல்விச் சான்றிதழ்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு நீக்கப்பட்டதால் வருவாய்த் துறை சான்று தேவையில்லை. ஏற்கெனவே விண்ணப்பம் பெற்றிருந்தால் வங்கிக் கணக்குப் புத்தகம், அசல் கல்விச் சான்றிதழ்கள், வருவாய்த்துறை சான்று ஆகியவற்றுடன் மே 31ம்தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்கலாம். உதவித்தொகை பெறுவதன் மூலம் வேலைவாய்ப்பு பதிவு எண் எந்த விதத்திலும் பாதிக்காது. ரத்து செய்யப்பட மாட்டாது. ஏற்கெனவே உதவித்தொகை பெற்றிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க அவசியமில்லை.

No comments:

Post a Comment