02.04.2015 கோவை, :
கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுதோறும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015-16ம் ஆண்டுக்கான இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கும் பணிகள் நேற்று துவங்கியது. இதில் முதற்கட்டமாக பார்வையற்ற 300 பேருக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கூறியதாவது:
கோவையில் ஆண்டு தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டு தோறும் கணக்கெடுப்பு பணிகளும், புதுப்பிக்கும் பணிகளும் நடத்தப்பட்ட வருகிறது. இந்த ஆண்டிற்கு புதிய பஸ்பாஸ் அட்டைகள் மற்றும் புதுப்பித்தல் என மொத்தம் 874 பேருக்கு இலவச பஸ்பாஸ் கேட்டு போக்குவரத்து துறையிடம் விண்ணப்பம் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பார்வையற்றவர்கள் 542 பேர், மனவளர்ச்சி குன்றியவர்கள் 93 பேர், கை, கால்கள் ஊனமுற்றவர்கள் 129 பேர் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் 100 பேர் 874 பேருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக பார்வையற்றவர்கள் 300 பேருக்கு நேற்று இலவச பஸ்பாஸ் அட்டைகள் வழங்கப்பட்டது. இந்த வார இறுதிக்குள் விண்ணப்பித்துள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பஸ்பாஸ் அட்டைகள் விநியோகம் செய்யப்படும் என்றார்.

No comments:
Post a Comment