25.04.2015, புதுச்சேரி
உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்–அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.நடைமுறைக்கு வரும்
புதுச்சேரி சட்டசபையில் கடந்த 22–ந் தேதி முதல்–அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த நிலையில் முதல்–அமைச்சர் ரங்கசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட முதியோர் உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வருகிற ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு முதல்–அமைச்சர் ரங்கசாமி கூறினார்.
அனைத்து அறிவிப்புகளும்...
மேலும் நிருபர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:–
கேள்வி:– பட்ஜெட் அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனவே?
பதில்:– அனைத்து அறிவிப்புகளும் வருகிற 2016ம் ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு ரங்கசாமி கூறினார்
No comments:
Post a Comment