FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, April 12, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு இணையதளத்தில் சலுகை டிக்கட் வழங்க வேண்டும்: மாற்றுத் திறானாளிகள் சங்கம்

11.04.2015
முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு நடைமுறையில் உள்ளது போல் இணையதளம் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கும் சலுகை கட்டணத்தில் ரயில்டிக்கட் பெற மத்திய, மாநில அரசுகள் வசதி செய்து தர வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறளானிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி கூட்ட அரங்கில் தமிழ்நாடு அனைத்து வரை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநிலக்குழுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் பா.ஜான்சிராணி தலைமை வகித்துப் பேசினார். மாநில துணைத் தலைவர் தே.லட்சுமணன், செயலாளர் எஸ்.நம்புராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் ஊழியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜா, நிர்வாகிகள் ராமகுமார், எழில்நிலவன், வீரமணி, ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அண்ணாமலைப் பல்கலையில் அனைத்து கட்டடங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சாய்தளம், மூன்று சக்கர வாகனம், நவீன கழிப்பறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்; கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க அரசாணைப்படி மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும்; நகராட்சி மற்றும் பேரூராட்சி

பேருந்து நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென பிரத்யோக கழிப்பறைகள் இல்லை. எனவே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அரசு கழிப்பறைகள் அமைத்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment