18.04.2015, திருப்பதி:
திருமலையில், மூத்த குடிமக்கள் வரிசையில், தேவஸ்தானம், மாற்றம் கொண்டு வர உள்ளது.திருமலையில், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், காலை, 10:00 மணி, மதியம், 3:00 மணிக்கு, தனி வரிசை மூலம், கோவில் முன் வாசல் வழியாக, ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது, அவர்களின் காத்திருப்பு வரிசை, கோவில் வடக்கு மாட வீதியில் உள்ளது. அதனால், அவர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு, வெகுதூரம் நடந்து செல்கின்றனர்.இதை தவிர்க்க, தேவஸ்தானம், அவர்களை, சஹஸ்ர தீபாலங்கார மண்டபம் எதிரில் உள்ள, அவசர வாசல் வழியாக, கோவிலுக்குள் அனுப்ப, முடிவு செய்துள்ளது. மேலும், அவர்களின் தரிசன நேரங்களில், தற்காலிக தரிசன வரிசை ஏற்படுத்தி, மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல், கோவிலுக்குள் அனுப்ப, தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

No comments:
Post a Comment