14.04.2016, அமெரிக்காவில் வசிக்கும் 16 வயது இந்திய சிறுவன் குறைந்த விலையில் காது கேளாதோருக்கான கருவியை தயாரித்து சாதனை படைத்துள்ளான். அதன் விலை சுமார் ரூ.4,000 ஆகும்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகுந்த் வெங்கடகிருஷ்ணன் அமெரிக்காவின் கென்டுகி மாகாணத்தின் லூசிவில்லி சிட்டியில் பெற்றோருடன் வசித்து வருகிறார். டுபான்ட் மேனுவல் உயர்நிலைப் பள்ளியில் பயின்று வரும் இவர், கடந்த 2 ஆண்டுகளாக முயற்சி செய்து இந்த கருவியை உருவாக்கி உள்ளார்.
பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தயாரிக்கப் பட்டுள்ள இந்தக் கருவியை விலை குறைவான ஹெட்போன்களிலும் பயன்படுத்த முடியும்.
இதுகுறித்து முகுந்த் கூறும் போது, “காது கேளாதோருக்கான கருவியின் விலை சுமார் ரூ.99,750 ஆக இருக்கிறது. ஆனால் நான் தயாரித்துள்ள கருவியை ரூ.4,000-க்கு தயாரிக்க முடியும். இதில் காது கேளாதோரின் தேவைக்கேற்ப ஒலியின் அளவை கூட்டி, குறைத்துக் கொள்ளலாம்” என்றார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு தனது தாத்தா, பாட்டி வசிக்கும் பெங்களூருவுக்கு முகுந்த் சென்றுள்ளார். அப்போது தனது தாத்தாவுக்கு காது கேளாத பிரச்சினை காரணமாக மருத்து வரை அணுகி கருவியை பொருத்தி உள்ளனர்.
இதற்காக சுமார் ரூ.1.5 லட்சம் செலவிட்டுள்ளனர். இதன் காரணமாகவே குறைந்த விலை யில் இந்தக் கருவியை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் முகுந்துக்கு வந்துள்ளது.
வரும் கோடை விடுமுறையில் பெங்களூருவுக்கு செல்ல இருப்ப தாகவும், தனது தாத்தாவுக்கு தான் கண்டுபிடித்த கருவியை வழங்க இருப்பதாகவும் முகுந்த் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment