FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Wednesday, April 20, 2016

சேலம் அருகே Deaf மாற்றுத்திறனாளியின் மனைவி மர்மச்சாவு கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை

20.04.2016 சேலம் : சேலம் அடுத்த கொண்டலாம்பட்டி பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. இவருக்கும், வீராணம் அடுத்த தைலானூரை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கும் கடந்த 10 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. பழனியம்மாளுக்கும், அருணாசலத்தின் அண்ணன் சுப்ரமணிக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள், அவரை கண்டித்துள்ளனர்.

இதனால் சுப்ரமணியுடன் இருந்த தொடர்பை பழனியம்மாள் நிறுத்தி கொண்டார். இதுதொடர்பாக, சுப்ரமணிக்கும், பழனியம்மாளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுப்ரமணி, கடந்த இரு தினங்களுக்கு முன்பு பழனியம்மாளை தாக்கியதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை, பழனியம்மாள் வீட்டில் மயங்கி கிடந்தார். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பழனியம்மாளின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “பழனியம்மாளை, சுப்ரமணி, அவரது தாயார் மற்றும் மனைவி சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இதுகுறித்து புகார் கொடுத்தால், கொண்டலாம்பட்டி போலீசார் புகாரை ஏற்க மறுக்கின்றனர். கொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர். தகவல் அறிந்து வந்த உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் குமரேசன், சரவணன் ஆகியோர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். 

No comments:

Post a Comment