01.04.2016, மாற்றுத் திறனாளி பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஸ்ரீரங்கன் (50). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வாய் பேசமுடியாத மாற்றுத் திறனாளிப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்ததாம்.
இதனால், அப்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தை 4 மாதங்களில் இறந்துவிட்டது. இதையடுத்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி ஸ்ரீரங்கனிடம் அப்பெண் கேட்டு வந்தாராம். ஆனால், ஸ்ரீரங்கன் திருமணத்துக்கு மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர். இவ்வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஸ்ரீரங்கனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திருநாவுக்கரசு வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment