கிரீடு தொழிற்பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் எஸ்.சுப்பையன் வரவேற்றார். தொண்டு நிறுவனச் செயலர் வி.நடனசபாபதி தலைமை வகித்தார்.
அவர் பேசியது: கிரீடு தொண்டு நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல சமூகப் பணிகளை செய்து வருகின்றது. இதன்மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நிறுவனம் (சஐஉடஙஈ) சார்பில், 20 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையுடன் இலவச கணினி தொழில் திறன் பயிற்சி 5 மாதங்களுக்கு அளிக்கப்படுகிறது.
இப்பயிற்சியின் மூலம் மாற்றுத் திறனாளிகள் பயன்பெற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறலாம் என்றார்.
முன்னதாக, அண்ணாமலைப் பல்கலைக்கழக உற்பத்தி பொறியியல் துறை உதவிப் பேராசிரியர் வி.சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்துப் பேசினார். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் வீரத்தமிழன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment