19.04.2016, கோவை; 'டெப் லீடர்ஸ் அசோசியேஷன்' சார்பில், மத்திய சமூக நீதித்துறை, திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இலவச கணினி பயிற்சி வகுப்பு, சாய்பாபா காலனியில் துவங்கப்பட்டுள்ளது.
டெப் லீடர்ஸ் அசோசியேஷன் இயக்குனர் முரளி கூறுகையில்,'' காது கோளாத இளைஞர்களுக்கு, தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் நோக்கில், பிரதமரின், 'திறன் மேம்பாட்டு திட்டத்தின்' கீழ், இலவச கணினி பயிற்சி வகுப்பு நடக்கிறது. இதில், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட, 20 பேர் பயிற்சி பெற தகுதியுள்ளவர்கள்.
''ஐந்து மாதக்கால பயிற்சி வகுப்புக்கு, போக்குவரத்து செலவு உட்பட, 2,500 ரூபாய், உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. வகுப்பு, காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. இதுசார்ந்த கூடுதல் தகவல்களுக்கு, 98438 31650/ 97156 47116/ 98940 58898 என்ற எண்களுக்கு, தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment