தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனமும், ஜேஎல்ஆர் தொண்டு நிறுவனமும் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், இலவச செல்லிடப்பேசி பழுதுநீக்கும் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, தொண்டு நிறுவன நிர்வாகி ஜெபமணி தலைமை வகித்தார். சுப்பையா முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சோலையப்பராஜா முகாமைத் தொடங்கிவைத்தார். இந்த முகாமில், 25-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

No comments:
Post a Comment