FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, September 21, 2025

ஆசியாவிலேயே முதல்முறை... சென்னையில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு AI கற்றுக்கொடுக்க சிறப்புத் திட்டம் !



17.09.2025
அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் அதற்கு உடல் குறை தடை இருக்கக்கூடாது என முத்தமிழறிஞர் கலைஞர் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களும் சலுகைகளும் செய்துள்ளார் அதன் ஒரு பகுதியாக கடந்த 2007ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருத்த போது செவிதிறன் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆசியவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் பி. காம் மற்றும் பி. சி. ஏ பாடப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தற்போது 300க்கு மேற்பட்ட மாற்றுதிறனாளி மாணவர்கள் இப்பாடப்பிரிவை எடுத்து படித்து வருகின்றனர். கடந்த 18 வருடங்களாக இந்த இரண்டு பாடபிரிவிலும் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஏராளமானோர் அரசு பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென்றே இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மாநில கல்லூரியில் 21 கோடி ரூபாய் செலவில் பிரத்யேக விடுதியை கடந்த ஆண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இப்படி தொடர்ச்சியாக அரசு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக குறிப்பாக செவித்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு பாடப்பிரிவு மற்றும் தனி விடுதி என திராவிட மாடல் ஆட்சியில் தொடர்ச்சியாக திட்டங்கள் வகுத்து வரும் நிலையில் புதிய வரலாற்று சாதனையாக செயற்கை நுண்ணறிவு சர்வதேச பாட பிரிவும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே முதன் முறையாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சென்னை மாநில கல்லூரியில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு இணைந்து லிப் ரீடிங் மற்றும் சைன் லாங்குவேஜ் மூலம் ஏ.ஐ டூல்ஸ் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

-கலைஞர் செய்தி 

No comments:

Post a Comment