FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, September 28, 2025

"காது கேட்காத அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுத்தேன்" - புதுமைப் பெண் திட்டம் பற்றி மாணவி நெகிழ்ச்சி!



25.09.2025 
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - கல்வி எழுச்சியின் கொண்டாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக அரசின் திட்டங்கள் விளக்கப்பட்டதுடன், பயன்பெற்ற மாணவர்கள் நேரடியாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.

அந்தவகையில் புதுமைப் பெண் திட்டத்திநால் பலனடந்தது பற்றி பேசிய ரம்யா என்ற மாணவி அரங்கில் அனைவரையும் நெகிழவைத்தார். "நான் நினைக்கிற எல்லாமே என் வாழ்க்கையில நடந்துட்டு இருக்கு. நான் தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி என்ற கிராமத்தில் இருந்து வரேன். நான் திருச்சி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறேன் என்னுடைய அப்பா ஒரு கூலி விவசாயி. அவங்களால என்ன உயர்கல்வி படிக்க வைக்க முடியல. அதனால 'வேணாமா படிக்காத' அப்படின்னு சொல்லி விட்டுட்டாங்க.

அந்த கேப்ல நான் கொஞ்சம் வேலை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச சேவிங்ஸ் பண்ணி வச்சிருந்தேன். எதுக்காவது யூஸ் ஆகும்னு. எங்க மேம் ஒரு நாள் போன் அடிச்சு, 'ஃபீஸ் தானே கட்டிக்கலாம். வந்து காலேஜ் ஜாயின் பண்ணி விடுங்க' அப்படின்னு சொல்லி என்னை படிக்க வைக்க சொன்னாங்க.

என்ன காலேஜ்ல சேர்த்து விட்டு எனக்கு பீஸ் கட்டினாங்க. மத்தபடி என்னோட எல்லா எஜூகேஷன் செலவும் இந்த திட்டம் மூலமாக தான் செய்றேன். எனக்கு என்ன தேவையோ அது எல்லாத்தையும் வாங்கிக்கிறேன். இதுக்கு ரொம்ப நன்றி.

இந்த திட்டம் எனக்கு இன்னொரு ஹெல்ப் பண்ணியிருக்கு. லைஃப்ல எல்லாரும் சொல்லுவாங்க அப்பா அம்மாவை எந்த இடத்திலும் விடக்கூடாதுன்னு, நான் நிறைய இடத்துல என் அப்பா அம்மா கஷ்டப்படுவதை கண்ணில் பார்த்துட்டேன்.

எங்க அம்மாவுக்கு காது கேட்காது. அதனால எல்லாரும் இந்த நிலைமையில என்ன படிக்க வைக்கணுமான்னு பேசினாங்க. என் அம்மாவுக்கு நான் போன மாசம் ஒரு காது கேட்கிற மிஷின் வாங்கி கொடுத்தேன். அந்த மிஷின்னால இப்ப எங்க அம்மா கேட்டுட்டு இருக்காங்க. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார்.

மாணவி சொல்ல சொல்ல தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு மொழிபெயர்த்து அவரை நெகிழவைத்தார் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

மேலும் பேசிய மாணவி, "இந்த ஒரு திட்டத்தினால, எனக்கு எங்க அம்மாவுக்கு மிஷின் வாங்கி கொடுக்க முடிஞ்சதை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. எல்லோரும் படி படின்னு சொல்றீங்க, கண்டிப்பா படிக்கிறேன். நான் படித்து இதே மாதிரி அம்மாவுக்கு கண்டிப்பா காது ஆபரேஷன் பண்ணுவேன். எங்க அப்பாவுக்கும் நிறைய உடல்நிலை பிரச்னைகள் இருக்கு. அதுக்கு நிறைய கடன் வாங்கி இருக்காங்க. நான் படிச்சு கண்டிப்பா எங்க அப்பா கடன் எல்லாத்தையும் அடைப்பேன்." என்றா

மேலும் தன் பெற்றோரை நோக்கி, "நான் உங்களை எப்போதும் விட்டிட மாட்டேன். நிறையபேர் என் அம்மாவை ஹர்ட் பண்ணினாங்க. அதனாலதான் அவங்களுக்கு மிஷின் வாங்கிக்கொடுக்கத் தோனினது. நான் படிச்சு அவங்களுக்கு ஆப்பரேஷன் செய்வேன். அப்பா வாங்கின கடனை அடைப்பேன்" என்றார்.



No comments:

Post a Comment