FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Tuesday, September 23, 2025

மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் அறிவியல் கருத்தரங்கு



21.09.2025
ஊட்டி; ஊட்டி காது கேளாதோர் மற்றும் வாய் பேசாத மாற்றுத்திறனாளிகளுக்கான, அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் சார்பில், 'நம்பிக்கையூட்டும் கணிதம் மற்றும் நவீன அறிவியல் ' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டியன் பியூலா தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

இயற்கை எல்லோரையும் வஞ்சிப்பது இல்லை. ஏதேனும் ஒன்றில் குறை இருந்தால், மற்றொன்றில் நிறை இருக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு இயற்கை, கூர்மையான ஒரு சிறப்பு கொடையை வழங்கியுள்ளது. இந்த அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு சிறப்பான கருவி தான் கணிதம். மாற்றுத்திறனாளி மாணவர்கள், இயற்கை வழங்கியள்ள கொடை எது என்பதை புரிந்து, வாழ்க்கையை மேற்படுத்திக் கொள்ளலாம்.

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், அவருடைய கழுத்துக்கு கீழ் முழுமையாக செயலற்றிருந்த நிலையிலும், உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாக திகழ்ந்தார். அவரை போல, பல மாற்றுத்திறனாளிகள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருவதை காண முடிகிறது. பார்வையை முற்றிலும் இழந்த ஒருவர், அரசு பள்ளி தலைமை ஆசிரியராக சிறப்பாக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மாணவர், இரண்டு முதுகலை பட்டங்களை பெற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைபாடுகளை நினைத்து சோர்வடைய தேவையில்லை.

நவீன அறிவியல் பல வகைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு துணையாக நிற்கிறது. ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட, ஒரு ஹெல்மெட் கண் பார்வையற்றவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் எளிதாக நடமாட துணை புரிகிறது.

ஒரு சிறிய சிலிக்கான் சிப்ஸ், கை கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் பொருத்தப்பட்டு அவற்றை இயற்கையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எந்த வேலையை செய்வதற்கும் மனதால் நினைத்தாலும், செயற்கை அங்கங்கள் வேலை செய்யும்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் தங்கள் குறைகளை வரமாக நினைத்து செயல்பட்டால், வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கணிதத்தில் சிறப்பான திறமை பெற்ற மாணவர் பிரேம்குமாருக்கு, ரொக்க பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு செய்கை மொழியில் விளக்கினார். ஆசிரியர் ராம்குமார் வரவேற்றார். ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.


No comments:

Post a Comment