FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Monday, March 30, 2015

பட்டப்படிப்பு, கம்ப்யூட்டர் தகுதிக்கு இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 100 காலியிடங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இந்திய ஸ்டீல் ஆணையத்தின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய வாணிப நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கிளை அலுவலகங்களை கொண்டுள்ளது.

இந்த அலுவலகங்களில் காலியாக உள்ள 100 ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

பணி:
ஜூனியர் அசிஸ்டென்ட் டிரெய்னி (நிலை - எஸ் - 3):

மொத்த இடங்கள்:
100 (எஸ்சி - 16, எஸ்டி - 6, ஒபிசி - 28, பொது - 50).

சம்பளம்:
ரூ.16,800 - 24,110.

வயது:
1.3.2015 தேதிப்படி 18 முதல் 28க்குள்.

தகுதி:55 சதவீத தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஒரு வருட டிசிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். (எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் 45 சதவீதம் பெற்றிருந்தால் போதும். கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருந்தால் போதும்).

அதிகபட்ச வயது வரம்பு
1.3.2015 தேதிப்படி கணக்கிடப்படும். எஸ்சி, எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு மத்திய அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்.

எழுத்துத்தேர்வு, கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, ஐதராபாத், மும்பை ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும். கம்ப்யூட்டர் திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு கொல்கத்தாவில் நடைபெறும்.

விண்ணப்ப கட்டணம்:
ரூ.250. இதை இன்டர்நெட் பேங்கிங் அக்கவுன்ட்/ கிரெடிட் கார்டு/ டெபிட் கார்டு மூலம் ஆன்லைன் முறையில் செலுத்தவும். ஸ்டேட் பாங்க் செலானை பயன்படுத்தியும் கட்டணம் செலுத்தலாம். எஸ்சி., எஸ்டி., மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

www.sailcareers.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 2.4.2015.

விண்ணப்ப கட்டணம் செலுத்திய விவரங்களை சரிபார்க்க, திருத்தம் செய்ய கடைசி நாள்:8.4.2015.

Saturday, March 28, 2015

வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை


21.03.2015
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் காரமடை திருமலை வீதியை சேர்ந்த வணங்காமுடி (வயது-57) என்பவர் சமையலர் மற்றும் வார்டனாக வேலை செய்து வந்தார்.

இவர் அந்த காப்பகத்தில் தங்கி இருந்த வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான 15-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து, வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி இதை யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-10-2013,அன்று கோவை மக்கள் நல சேவை சங்கம் சார்பில் அந்த காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது, அந்த சங்கத்தை சேர்ந்த பெண்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி சைகை மூலம் தெரிவித்தார். உடனே அவர்கள் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காரமடை போலீசார் கடந்த 7-10-2013,அன்று அந்த காப்பக வார்டன் மற்றும் சமையலரான வணங்காமுடி மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வணங்காமுடியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார். மேலும், சம்பவம் நடந்த காப்பகத்துக்கு மகளிர் கோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் சரோஜினி மற்றும் எதிர்தரப்பு வக்கீல் ஆகியோரும் நேரில் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அந்த சிறுமியால் பேசவோ, கேட்கவோ முடியாது என்பதால், திருப்பூர் கோதம்பாளையம் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் சைகை மூலம் அந்த சிறுமியிடம் பேசி, அவர் சொன்னதை நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட வணங்காமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். காது கேட்காத, வாய் பேசமுடியாத அந்த சிறுமிக்கு 15 வயது ஆனாலும், மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அவர் 6 வயது மதிக்கத்தக்கவர் என்றே எடுத்துக்கொள்ளப்படுவார்.

எனவே அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தீர்ப்பின் நகலை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற வணங்காமுடியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

அரசுடன் நடந்த பேச்சில் உடன்பாடு மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்||DisabilitiesStruggleWithdraws

காது கேளாதோருக்கான இடங்கள் மாநிலக் கல்லூரியில் அதிகரிப்பு


மாற்றுத்திறனாளிகளின் காத்திருப்பு போராட்டம் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைச்சர் வாக்குறுதி


Dinakaran - state does not care for persons with disabilities: MLA after meeting Karunanidhi allegation | மாற்றுத்திறனாளிகள் மீது அரசுக்கு கவலை இல்லை: எம்எல்ஏ கூட்டத்துக்கு பின் கருணாநிதி குற்றச்சாட்டு

கோரிக்கையை ஏற்பதாக அமைச்சர் வாக்குறுதி மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் - District Dinakarn

Wednesday, March 25, 2015

Differently abled launch strike - The Hindu

திருவெறும்பூரில் 142 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கல்

24.03.2015, திருவெறும்பூர், : 
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 142 பேருக்கு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவெறும்பூரில் உள்ள சட்டமன்றத் தொகுதி அலுவலகம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த எம்எல்ஏ செந்தில்குமார், ரூ.4.3 லட்சம் மதிப்பிலான 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், பிளாஸ்டிக் காலிப்பர், மெட்டல் காலிப்பர், மடக்கி ஊன்றுகோல், பிரேஸ்லி கடிகாரம், செயற்கை அவயம், இணைப்பு பொருத்தப்பட்ட ஸ்கூட்டர், காதொலிக் கருவி உள்ளிட்டவற்றை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி. ராமகிருஷ்ணன்

சென்னை,25 March 2015
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தைவிட அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் இல்லை. ஆனாலும், இந்தத் தீர்ப்பை அரசு அமலாக்கவில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற வேண்டுமானால் அவர்களுக்கு அரசின் அடையாளச் சான்றிதழ் வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான அடையாளச் சான்றிதழைப் பெறவே அவர்கள் போராட வேண்டியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு, அடையாளச் சான்றிதழ் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

Sit & Wait struggle ends

The "sit & wait" struggle organised by TARATDAC comes to an end in the evening today after talks the social welfare minister Smt. B. Valarmathy

She assured to take steps to withdraw the stringent norms in giving monthly maintenace allownce for disabled. She also promised to give allowance throu the dept of differently abled instead of revenue. The increased allowance of Rs.1500 for mentally disabled and severely disabled would be given forthwith from April by disab dept with the arrears.

In the matter of employment and disab certificates, she assured to hold discussion with the concerned depts and assured positive results.

With these assurances the sit & wait was broght to an end. The Dy Director of disab dept along with the Chennai dist welfare offices came to the pandhal and conveyed the words of the minister.

Monday, March 23, 2015

Hearing disabled demand autonomy of sign language centre | Business Standard News

தேசிய மாற்று திறனாளிகள் போட்டி:வீரர்கள் நடத்தபட்ட விதம் குறித்து விசாரணை நடத்தப்படும் மத்திய விளையாட்டு துறை மந்திரி||Probe-National-ParaAthletic-Championship-fiasco-Union

Dinakaran - Handicapped players bath with truckwater who participated in the national sports | விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்ற மாற்றுத்திறனாளி வீரர்களை லாரி தண்ணீரில் குளிக்க வைத்த துயரம்!

Friday, March 20, 2015

DEAF IS JOB PROBLEM


ALL INDIA DEAF WILL COME TO ONE FLAG


Thursday, March 19, 2015

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் வாபஸ்

19.03.2015
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் நடத்திய தொடர் போராட்டம் புதன்கிழமை முடிவுக்கு வந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அவர்கள் அறிவித்தனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர் பணி நியமனத்துக்கான உத்தரவை வழங்க வேண்டுமென பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் 10-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலகத்தில்... தங்களது கோரிக்கையை வலியுறுத்தி, தலைமைச் செயலகம் எதிரே பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதன் பிறகு, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுடன் தமிழக அரசின் சார்பில் சமூகநலம்-மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அமைச்சர் பா.வளர்மதி தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளின் 9 அம்சக் கோரிக்கைகளில் 4 அம்ச கோரிக்கைகளை அரசுத் தரப்பில் ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

தனியார் கல்லூரி, பள்ளிகளில் வேலைக்கு உத்தரவாதம், வேலையில்லாத பார்வையற்ற பட்டதாரிகளுக்கு உதவித் தொகை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஏற்பதாக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சென்னையிலும், திருச்சியிலும் கடந்த 10 நாள்களாக நடத்தி வந்த போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக பார்வையற்ற பட்டதாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர் போராட்டம்: பார்வையற்ற பட்டதாரிகள் போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில், அனைத்து மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடனும் அரசுத் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற தங்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவை வழங்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இக் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், தங்களின் போராட்டம் தொடர்வதாக ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

டிபிஐ வளாகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி - தி இந்து

No truth in official's statement

Victim's family there in the village only.
---------------
In connection with the Denkanikotta deaf girl gang rape case, Dr. A. Chandranathan, Director of Medical Services & the head of the committee constituted to probe the allegations against doctors given interview to two major English dailies "that the family is not available, and they moved out of village - as per the information given by their dist officials".

On behalf of TARATDAC we are refusing the statement. The family is not moving anywhere. In this morning while contacting over phone, the family said that no such health officials not visiting them so far. .

We hereby informing the officials that the family assured our association to co-operate for the probe.
NOTE; Contact No. of the father Mr. Veerabathirappa is -9442755729



Wednesday, March 18, 2015

மாபெரும் காத்திருக்கும் போராட்டம், நாள்:24.03.2015 காலை 10 மணி முதல், இடம்: சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு


Deaf girl gang rape issue: Inquiry Commission on Doctors

  • The state health dept has formed a Inquiry Commission to probe the doctors misdeeds on issuing of false certificate in the minor deaf girl gang rape issue in Krishnagiri Dist. 
  • The TARATDAC has sent a petition to the state health secretary on Feb.13 and demand to take action on the misdeeds of doctors on various occasions in this heinous crime. Particularly the Denkanikotta Govt. Hospital Dr. Ranganathan, who admitted the minor deaf girl for 6 days and not taken any steps to find evidences regarding the sexual assault. 
  • In the same way, to hide the facts and realities Dr. Nandini of Govt Hospital, Hosur of Krishnagiri district, has given a contrary and irrelevant medical report as "hymen is intact, no external injuries over external genitalia, and the minor girl has not been raped" to safeguard the vested interest.
  • But, on the direction of the Chennai High Court a re-medical examination was conducted at Dharmapuri medical college hospital and found that "hymen was not intact and external injuries were found on the genitalia, even after 40 days of the crime committed.
  • Now, the state health & rural health services dept director Dr. A. Chandranathan has set up this commission on March 9th, as per the direction of the state health secretary Dr. J. Radhakrishnan based on our demand.
  • The order states that the commission headed by its additional director Dr. Kirushnamoort. Dr.Geetha Mahadevan of Govt. hospital for women & children, Chennai Egmore, & Dr. Ajji Kannammal, expert advisor to state health project.

Saturday, March 14, 2015

பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு ஆதரவாக மறியல்! பார்வையற்ற மாணவர்கள் கைது!


பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு ஆதரவாக சென்னை கோடம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

வேலை வாய்ப்பில் உரிய இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் கடந்த 6 நாட்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பார்வையற்ற மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை அவர்கள் கோடம்பாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இடஒதுக்கீடுபடி வேலை வழங்க கோரிக்கை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் 1.10 லட்சம் பேர் பதிவு

14.03.2015, சென்னை: 
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து, வேலைக்காக காத்திருப்பதாகவும், இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி 3 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சென்னையில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலாளர் நம்புராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் பிற மாநிலங்களில் 40 சதவீதம் உடலில் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் உடலில் 60 சதவீதம் ஊனமிருந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உடலில் 40 சதவீதம் ஊனமுள்ள அனைவருக்குமே தமிழக அரசு மாதம் யி3 ஆயிரம் வழங்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இதை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அமைச்சர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டு, இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துகின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 2013ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையிலும், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 2013க்கு பின்பு கட்டப்பட்ட கட்டிடங்களில் இதுவரை ஒன்றில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் எந்த வசதிகளும் செய்யப்பட வில்லை. உதாரணமாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகமே இதற்கு சான்று. இக்கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 24ம் தேதி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர்.

சென்னையில் மார்ச் 24 முதல் மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம்


மாற்றுத் திறனாளிகள் வங்கிக்கடன் பெற விதிமுறைகள் எளிமையாக்கம்

13.03.2015
வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் கடன் பெறுவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி எளிமையாக்கியுள்ளது.

இதுதொடர்பாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாற்றுத் திறனாளிகளை நலிவுற்ற பிரிவினர் என்ற பிரிவில் சேர்த்து முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நலிந்த பிரிவினர் என்ற பிரிவில் இப்போது சிறு விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் இடம்பெற்றுள்ளனர்.

வங்கிகளின் கடன் அளிப்பில் 10 சதவிகிதத்தை நலிந்த பிரிவினருக்கு வழங்க விதிமுறை உள்ளது. அதே பிரிவில் மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்க ரிசர்வ் வங்கி இப்போது உத்தரவிட்டுள்ளது.

Hearing Hands - Touching Ad By Samsung



Friday, March 13, 2015

பார்வையற்ற பட்டதாரிகள் மறியலில் தள்ளு -முள்ளு


Huge "Sit in Dharna until Issues settled" கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மாபெரும் காத்திருப்பு போராட்டம் - மாற்றுதிறனாளி சங்கம் அறிவிப்பு


கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மாபெரும் காத்திருப்பு போராட்டம் - மாற்றுதிறனாளி சங்கம் அறிவிப்பு
தமிழகத்தில் மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க ஊனத்தின் சதவிகிதம் 60க்கும் மேல் இருக்க வேண்டும், 5000 ரூபாய்க்குமேல் குடும்ப சொத்து இருக்க கூடாது, குடும்பத்தில் ஆண் வாரிசு இருக்ககூடாது, அனாதையாக இருக்க வேண்டும் போன்ற பொருத்தமற்ற வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத விதிமுறைகளை தமிழக அரசு கடைபிடிக்கிறது. இப்படிப்பட்ட கடுமையான விதிமுறைகளை மாநில அரசு கைவிட வேண்டும், உதவித்தொகையை மாதம் 3000 ஆக உயர்த்தி மாற்றுதிறனாளி

நலத்துறை மூலமே வழங்க வேண்டும், காது கேளாதோருக்கு 80 சத ஊனம் இருந்தால்தான் உதவித்தொகை வழங்கப்படுமென்ற பாரபட்சமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 24 காலை முதல் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பாக 3000க்கும் மேற்பட்ட மாற்றுதிரனாளிகளை மாநிலம் முழுவதுமிருந்து திரட்டி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுதிரனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக இன்று சென்னையில் பதிரிகையாலர்கள சந்தித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, மற்றும் மாநில செயலாளர் எஸ். நம்புராஜன் தெரிவித்தனர்.

மேற்கண்ட பிரதான கோரிக்கையுடன், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே அரசாணைப்படி அடையாள சான்ற வழங்க வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசின் எல்லா துறைகளிலும் பின்னிடைவு காலி பணியிடங்கள கண்டறிந்து உடனடியாக நிரப்ப வேண்டும், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பின்பற்றப்படும் முன்னுரிமை பட்டியலில் 2009 மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தபடி முதலிடத்திற்கு மாற்றி, தற்போது காத்திருக்கும் 1,10,000க்கும் மேற்பட்ட மாற்றுதிரனாளிகளுக்கு பணிகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

மேலும், போக்குவரத்து, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட வெவ்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தலைமை செயலாளர் தலைமையில் சம்பந்தப்பட்ட துறை செயலாளர்கள் ஆணையர்கள், எமது சங்க பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து தீர்க்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை வைதுள்ளக அவர்கள் தெரிவித்தனர்.
------------------

Huge "Sit in Dharna until Issues settled" 

The Tamilnadu Assn for the Rights of All Types of Differently Abled & Care Givers has announced to hold huge "Sit in Dharna until Issues settled" at the Chennai Chepauk arena on 24th March from 10am.


The main demands are as follows:
To repeal the stringent norms for giving monthly allowance for disabled such as completion of 18 years, family wealth should not be above 5000 rupees, the disability should be more than 60%, increase the allowance from 1000 to 3000 rupees and no male heir to be in the family.

Along with the above demand as per the existing order the disability certificate should be issued in the primary heath centres, as per the 2013 supreme court judgement the state should bring out to light the backlog vacancies from all the departments of the disabled as per the 3% legal right. In this regard, the govt should also submit a white paper in the state assembly.

And also the association demand is to set up a committee headed by the Chief Secretary to settle various pending issues concerning with various departments.


Thursday, March 12, 2015

TNSFD - G.B. News

Deaf TCAD Job News

அவர்களுக்குத் தேவை கருணை அல்ல !

11.03.2015
பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு 9.3.2015 முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த. கணேசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

“கர்ணகொடூரமாக நடந்துகொள்ளும் இந்த அரசிடம் கருணையை நாம் எதிர்பார்க்க முடியாது. இதை பார்வையற்ற மாணவர்கள் பிரச்சனையாக மட்டும் பார்த்து ஒரு இடத்தில் முடங்கிவிடக் கூடாது. இது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தின் பிரச்சனை. அனைத்து கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களை இப்போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரட்ட வேண்டும். அப்போதுதான் குறைந்தபட்ச நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்” என்று எழுச்சியுடன் பேசினார்.

பார்வையற்ற இந்த மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க வேண்டும் என்று கோருகின்றனர். இதை செவிகொடுத்து கேட்க தயாரில்லாத போலீசோ அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று நைச்சியமாக மிரட்டுகிறது.

பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகள் என்ன என்று கேட்போது அவர்கள் சொன்னது “புதிதாக ஒன்றும் கேட்கவில்லை சார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு என்ன கேட்டோமோ அதையேதான் இப்போது கேட்டு போராடுகிறோம்’’ என்றார்.

இந்த அரசால் செய்ய முடியாத அளவுக்கு அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்?

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் தர வேண்டும் என்று கோருகிறார்கள். இதை செய்ய முடியாதா? செய்ய முடியாது என்பதல்ல செய்யக்கூடாது என்பதுதான் இந்த அரசின் நோக்கம்.

நீண்ட நாட்களாக ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. அவற்றை நிரப்பி வேலையற்ற படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலையும், அதன் மூலம் மாணவர்களுக்கு தரமான கல்வியும் கொடுக்கலாம். அப்படி செய்துவிட்டால் அரசுப்பள்ளி, கல்லூரிகள் தரமாகிவிடும், தனியார் பள்ளியை / கல்லூரியை நோக்கிச் செல்லும் மாணவர்கள் அரசுப் பள்ளி, கல்லூரியை நோக்கி திரும்பி விடுவார்கள். அப்புறம் தனியார் கல்வி முதலாளிகள் எப்படி கல்லாக் கட்ட முடியும். அவர்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே! இதை செய்யத் துணிவார்களா? அதனால்தான் தங்கள் எஜமானின் விசுவாசத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் ஒடுக்குவதில் தப்பில்லை என்று பார்வையற்ற மாணவர்களின் வாழ்வை பறித்து வருகிறது இந்த அரசு.

  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்த வேண்டும்
  • முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியுடைய 200 பார்வையற்ற பட்டதாரிகளை உடனடியாக சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய வேண்டும்.
  • உதவிப் பேராசியருக்கான தகுதித் தேர்வு (NET Or SET) முடித்து நீண்டகாலமாக காத்திருக்கும் தகுதி உடைய பார்வையற்ற 100 பட்டதாரிகளுக்கு உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உடனடியாக சிறப்பு நேர்காணல் மூலம் நிரப்பப்பட வேண்டும்.
  • பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். தமிழக அரசு பார்வையற்றவர்களுக்கென கண்டறிந்துள்ள காலிப்பின்னடைவு பணியிடங்களை (9000 பணியிடங்கள்) உடனடியாக ஒரு சிறப்பு தேர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.
  • உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனடியாக குரூப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும்.
  • பார்வையற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசினால் வழங்கப்படுகின்ற ஊர்தி பயணப்படியினை மத்திய அரசு வழங்குவது போல் ஊதியத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
  • படித்து முடித்து வேலைக்காகக் காத்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வேலையற்றோர் நிவாரண உதவித் தொகையினை ரூ.1000/- ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
  • தற்போது பார்வையற்ற கல்லூரி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித் தொகை இரட்டிப்பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
  • 01.04.2003 க்கு பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்த பார்வையற்ற அரசு ஊழியர்களுக்கும் சம பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்திலிருந்து விலக்கு அளித்து முழு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முழு ஓய்வூதியம் வழங்க ஆவன செய்தல் வேண்டும்.
  • பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு எழுத வரும் எழுதுனர்களுக்கு ரூபாய் 300/- வழங்கி அரசாணை வெளியிட வேண்டும்.

பார்வையற்ற மாணவர்களின் மேற்கண்ட கோரிக்கைகள் நியாயமானவை. ஆனால் அவற்றை இந்த அரசு தானாக நிறைவேற்றாது என்பதில் சந்தேகமே இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு இதே போல் போராடியபோது அரசு அவர்களை நடந்திய விதம் மிகவும் கொடூரமானது. போராட்டத்தின் போது கைது செய்து சென்னைக்கு ஒதுக்குப் புறமாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் தன்னந்தனியாக விட்டு விட்டு வருவது என்பதை ஒவ்வொருமுறையும் செய்து மாணவர்களை உயிரோடு கொல்ல முயன்றது. அதில் பல நேரங்கள் இரவு நேரங்கள்.

அதுமட்டுமல்ல பார்வையற்ற மாணவிகளை போலீசு பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கின. அரசின் இந்த அடக்குமுறைகளுக்கு பணியாத பார்வையற்ற மாணவர்கள் உறுதியாக போராடினார்கள். ஆனால் இறுதியில் அவர்கள் கண்ட பலன் வெறும் வாக்குறுதிகள்தான். இப்போதும் அதே வழிமுறைகளில் பார்வையற்ற மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு எத்தனிக்கும்.

நாம் என்ன செய்யப்போகிறோம். வேடிக்கை பார்ப்பது அவமானம். போராடும் பார்வையற்ற மாணவர்களுக்கு துணை நிற்க வேண்டியது கருணையல்ல, நமது கடமை.

- வினவு

சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் மறியல்: 100 பேர் கைது


தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்துக் காத்திருக்கும் தகுதியுடைய பார்வையற்ற அனைவருக்கும் உடனடியாக பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டும். B.Ed பட்டம் பெற்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி தமிழ், ஆங்கிலம், வரலாறு போன்ற பாடங்களில் 550 பட்டதாரிகளை பட்டதாரி ஆசியர்களாக பணி அமர்த்த வேண்டும். பார்வையற்றோருக்கு உடனடியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு ஒன்றினை நடத்துவதற்கு தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்க தமிழக அரசு உடனயாக குருப் A மற்றும் B பிரிவு பணியிடங்களில் 500 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு வழங்க ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்து வருகின்றனர்.

புதன்கிழமை காலை தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை கடற்கரை ரயில்நிலையம் அருகே பார்வையற்ற பட்டதாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் கைது

11.03.2015, சென்னை,
பார்வையற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டதாரி சங்கத்தினர் சென்னை அண்ணா சாலை நந்தனம் சிக்னலில் நேற்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்த அவர்களை போலீசார் சட்டையை பிடித்தும், கை, கால்களை பிடித்தும் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துகின்றனர்.

Wednesday, March 4, 2015

பதிவு செய்யாத மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை: கலெக்டர் ராஜேஷ் எச்சரிக்கை

04.03.2015, கிருஷ்ணகிரி : 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பதிவு பெறாமல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளி தொண்டு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் ராஜேஷ் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் ராஜேஷ் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, அதில் பல தரப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பயனடையும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மலை கிராமங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள், மேலும் அதிக அளவில் நடத்தப்பட வேண்டும்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும், மாற்றுத்திறனாளிகள் சட்டம், 1995 பிரிவு, 52ன் கீழ், பதிவு செய்யாமல் இருந்தால், வரும், 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Tuesday, March 3, 2015

சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள்

2.03.2015 
பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சென்னைக் சாலிகிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் பா.வளர்மதி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினார். விழாவில் அவர் பேசியது: மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் குறித்து மாற்றுத் திறனாளிகள் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் அவர்கள், தங்களது கல்வி, தொழில், வேலைவாய்ப்புகளில் பிறருக்கு இணையாக விளங்க முடியும்.

மாற்றுத் திறனாளிகள் தற்போது அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களது திறமையை ஊக்குவிக்கும் இது போன்ற தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன் என்றார் அவர்.

முன்னதாக சமூகம், கலை உள்பட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான உதவிக்கரம் அமைப்பின் மாநிலத் தலைவர் டி.ஏ.பி. வரதக்குட்டி, சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் இயக்குநர் மரியஜீனா ஜான்சன், மாற்றுத் திறன் இசைக் கலைஞர் தான்சன், அரிமா சங்க மாவட்ட கவர்னர் கே.பி.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Indian Sign Language is best