சென்னை,25 March 2015
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றுத் திறனாளிகளுடன் பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை மாற்றுத்திறனாளிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது:
அரசு வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தைவிட அதிகாரம் பெற்ற நீதிமன்றங்கள் இல்லை. ஆனாலும், இந்தத் தீர்ப்பை அரசு அமலாக்கவில்லை.
மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெற வேண்டுமானால் அவர்களுக்கு அரசின் அடையாளச் சான்றிதழ் வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான அடையாளச் சான்றிதழைப் பெறவே அவர்கள் போராட வேண்டியிருப்பது வருத்தம் அளிக்கிறது.
உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும். எனவே, அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு, அடையாளச் சான்றிதழ் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார் ஜி. ராமகிருஷ்ணன்.

No comments:
Post a Comment