FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Saturday, March 28, 2015

வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காப்பகத்தில் பாதுகாவலருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை


21.03.2015
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குட்டையூர் எம்.கே.புதூரில் மனவளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் காரமடை திருமலை வீதியை சேர்ந்த வணங்காமுடி (வயது-57) என்பவர் சமையலர் மற்றும் வார்டனாக வேலை செய்து வந்தார்.

இவர் அந்த காப்பகத்தில் தங்கி இருந்த வாய் பேசமுடியாத, காதுகேட்காத, மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான 15-வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுகுறித்து, வெளியே தெரிவித்தால் கொன்று விடுவதாகவும் அந்த சிறுமியை மிரட்டி உள்ளார். இதனால் அந்த சிறுமி இதை யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் கடந்த 6-10-2013,அன்று கோவை மக்கள் நல சேவை சங்கம் சார்பில் அந்த காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அப்போது, அந்த சங்கத்தை சேர்ந்த பெண்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த சிறுமி சைகை மூலம் தெரிவித்தார். உடனே அவர்கள் இதுகுறித்து காரமடை போலீசில் புகார் செய்தனர்.
அதன்பேரில், காரமடை போலீசார் கடந்த 7-10-2013,அன்று அந்த காப்பக வார்டன் மற்றும் சமையலரான வணங்காமுடி மீது பாலியல் பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வணங்காமுடியை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சரோஜினி ஆஜராகி வாதாடினார். மேலும், சம்பவம் நடந்த காப்பகத்துக்கு மகளிர் கோர்ட்டு நீதிபதி சுப்பிரமணியன், அரசு வக்கீல் சரோஜினி மற்றும் எதிர்தரப்பு வக்கீல் ஆகியோரும் நேரில் சென்று அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

அந்த சிறுமியால் பேசவோ, கேட்கவோ முடியாது என்பதால், திருப்பூர் கோதம்பாளையம் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ் சைகை மூலம் அந்த சிறுமியிடம் பேசி, அவர் சொன்னதை நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட வணங்காமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். காது கேட்காத, வாய் பேசமுடியாத அந்த சிறுமிக்கு 15 வயது ஆனாலும், மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அவர் 6 வயது மதிக்கத்தக்கவர் என்றே எடுத்துக்கொள்ளப்படுவார்.

எனவே அந்த குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 7 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனையும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி சுப்பிரமணியன் தீர்ப்பு கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு நிவாரண நிதியாக ரூ.1 லட்சத்தை ஒரு மாதத்துக்குள் அரசு வழங்க வேண்டும் என்றும், இந்த தீர்ப்பின் நகலை மாவட்ட கலெக்டர் மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தண்டனை பெற்ற வணங்காமுடியை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment