13.03.2015
வங்கிகளில் மாற்றுத் திறனாளிகள் கடன் பெறுவதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி எளிமையாக்கியுள்ளது.இதுதொடர்பாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாற்றுத் திறனாளிகளை நலிவுற்ற பிரிவினர் என்ற பிரிவில் சேர்த்து முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நலிந்த பிரிவினர் என்ற பிரிவில் இப்போது சிறு விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் சுயஉதவிக் குழுக்கள் இடம்பெற்றுள்ளனர்.
வங்கிகளின் கடன் அளிப்பில் 10 சதவிகிதத்தை நலிந்த பிரிவினருக்கு வழங்க விதிமுறை உள்ளது. அதே பிரிவில் மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்க ரிசர்வ் வங்கி இப்போது உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment