FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Saturday, March 14, 2015

இடஒதுக்கீடுபடி வேலை வழங்க கோரிக்கை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் 1.10 லட்சம் பேர் பதிவு

14.03.2015, சென்னை: 
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து, வேலைக்காக காத்திருப்பதாகவும், இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி 3 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சென்னையில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலாளர் நம்புராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் பிற மாநிலங்களில் 40 சதவீதம் உடலில் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் உடலில் 60 சதவீதம் ஊனமிருந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உடலில் 40 சதவீதம் ஊனமுள்ள அனைவருக்குமே தமிழக அரசு மாதம் யி3 ஆயிரம் வழங்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இதை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அமைச்சர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டு, இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துகின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 2013ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையிலும், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், 2013க்கு பின்பு கட்டப்பட்ட கட்டிடங்களில் இதுவரை ஒன்றில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் எந்த வசதிகளும் செய்யப்பட வில்லை. உதாரணமாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகமே இதற்கு சான்று. இக்கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 24ம் தேதி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர்.

No comments:

Post a Comment