FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, July 15, 2015

பாரதிதாசன் பல்கலையில் ஜூலை 2ல் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்கம்

 15.07.2015, திருச்சி:
 பாரதிதாசன் பல்கலை இயக்குனர் பார்த்தசாரதி வெளியிட்ட அறிக்கை:
பாரதிதாசன் பல்கலையின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தில், உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள், கல்லூரிகளில் படித்து வருபவர்கள், இல்லத்தரசிகள், மாற்றத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் என அனைத்து தரப்பினரும் பயிற்சியில் சேரலாம்.
ஆஃபீஸ் ஆட்டோமேஷன் வித் டேலி, டேலி- ஈ.ஆர்.பி., ஜாவா, கம்ப்யூட்டர் ஹார்டுவேர் மற்றும் தொடர் அமைப்பு, இதழியல் மற்றும் மக்கள் செய்தித் தொடர்பியல், சமூக ஊடக வலையமைப்பு போன்ற மூன்று மாத கால சான்றிதழ் பயிற்சிகளையும், மற்றும் பெரு நிறுவன சமூக பொறுப்பு மற்றும் புதிய செய்தி ஊடகம் மற்றும் இணைய பத்திரிகை போன்ற ஆறு மாத கால பட்டய பயிற்சிகள் நடைபெற உள்ளது.

மேலும், ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்றவர்களுக்கு, கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முதுநிலை பட்டய பயிற்சிகளை நடத்தவுள்ளது. ஐ.ஈ.சி.டி.,யில் பயின்று பயன்பெறும் வகையில், அனைத்து சான்றிதழ் பயிற்சிகளுக்கு மட்டும் பயிற்சி கட்டணத்தில் உதவித்தொகை அளிக்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 50 சதவீதம், பி.சி., மற்றும் எம்.பி.சி, பிரிவினருக்கு, 25 சதவீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு, 100 சதவீத உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து வகுப்புகளும் வார நாட்களில், இரண்டரை மணி நேரத்துக்கு, ஒரு பகுதியாக பயிற்சிகள், மூன்று பகுதிகளாக நடத்தப்படும்.
அனைத்து பயிற்சிகளுக்கும் சேர்க்கை நடைபெற்று வருகிறது. உரிய சான்றிதழ்களுடன் (கல்வி, வகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளி) வந்து, வரும், 20ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிகள் அனைத்தும், ஜூலை, 21ம் தேதி முதல் துவங்குகிறது.
விண்ணப்பம் மற்றும் விளக்கவுரைகளை பெற, 50 ரூபாய்க்கான டி.டி.,யை, இயக்குனர் ஐ.ஈ.சி.டி., பாரதிதாசன் பல்கலை என்ற பெயரில், ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், எஸ்.பி.ஐ., காஜாமலை கிளையில் மாற்றத்தக்க வகையில் எடுத்துவர வேண்டும்.

No comments:

Post a Comment