FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Friday, July 17, 2015

மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க ரூ.2.37 கோடி கடன்

தூத்துக்குடி, ஜூலை 16–
தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தொழில் முதலீட்டுக் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. கலெக்டர் எம்.ரவி குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு, சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் ரூ.2.37 கோடி கடனுதவிகளை 663 பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தெரிவித்ததாவது:–
சீரழிந்து கிடந்த கூட்டுறவுத்துறையை முதலமைச்சர் ஜெயலலிதா அனைவரும் பாராட்டும்படி செயல்பட வைத்துள்ளார். தமிழகத்தில் மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் கூட்டுறவுத்துறை மூலமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலே நடத்தாமல் முடிக்கின்ற நிலையில் இருந்த பல்வேறு கூட்டுறவுச்சங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைந்த பின்பு தான் எந்த பிராச்சனையும் இல்லாமல் தேர்தல் நடத்தி இன்று மக்கள் பிரதிநிதிகளும் அலுவலர்களும் ஒன்றினைந்து கூட்டுறவு வங்கிகள் சிறப்பாக செயல்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் நான்காண்டு காலமாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசனைகளுக்கினங்க கூட்டுறவுத்துறையை செம்மையாக வழிநடத்தி வருகிறார். புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்துக்கொண்டு சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேட்கும்கேள்விகளுக்கு உடனடியாக பதில்களை எடுத்துக் கூறுவார் என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்ததாவது:–
முதலமைச்சர் ஜெலலிதா மாற்றத்தை தந்த தமிழக மக்களுக்கு ஏற்றத்தை தரவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பல புதுமையான திட்டங்களை தந்து அனைத்து தர மக்களும் பயன்பெறும் விதத்தில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கியுள்ளார். அம்மாவின் திட்டங்களை பாராளுமன்றத்தில் கூட மத்திய அமைச்சர்கள் பாராட்டுகிறார்கள். 1 கோடியே 69 லட்சம் குடும்பங்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் மூலம் இட்லி ரூ.1, தயிர்சாதம் ரூ.3, சாம்பார் சாதம் ரூ.5 என ஏழைகளின் வயிற்றில் பால்வார்த்துள்ளர்கள். ஆலயங்கள் தோறும் அன்னதானம் வழங்கி அண்ணா சொன்ன ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற பொன்மொழிகளை நனவாக்கி வருகின்றார். இன்று கூட்டுறவு வங்கிகளின் மூலம் 43 ஆயிரம் கோடி பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன், தொழில் கருவிகள், அறுவடை மிஷின் போன்றவை வேளாண்மைத்துறையின் .மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரசு ஏழைகளின் அரசு அனைத்து திட்டங்களையும் வாரிவழங்கும் இந்த அரசுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவுத்துறை வங்கியின் மூலம் 663 பயனாளிகளுக்கு 2,37,37,500 கடன் உதவிகளையும், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 13 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும், 13 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி நல துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, திருமண நிதியுதவி, காது கேட்கும் கருவி என மொத்தம் 26 நபர்களுக்கு ரூ.2,72,680–க்-கான நலத்திட்ட உதவிகளையும், முதியோர் உதவித்தொகையும் 5 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 21 நபர்களுக்கும் அமைச்சர்கள் வழங்கினார்கள்.
முன்னதாக புதிய பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை காய்கறி அங்காடி, அம்மா மருந்தகம் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிப்புகளின் வகை மையத்தினையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) ஆனந்த், கூடுதல் பதிவாளர் (நிதி) ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மேயர் அ.ப.ரா.அந்தோணி கிரேஸ், தூத்துக்குடி சட்ட மன்ற உறுப்பினர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட ஊராட்சித் தலைவர் துணை மேயர் பி.சேவியர், இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் வெ.லட்சுமி, இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி, தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு துணை தலைவர் வெ.வெம்பூர், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் இரா.சுதாகர், தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, மேற்கு மண்டல தலைவர் எம்.ஜெயபாரதி மனோகர், மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கு.தமிழ்செல்வராஜன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் சி.குமார், தே.ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனார்.
-மக்கள் குரல்

No comments:

Post a Comment