31.07.2015
கிருஷ்ணகிரி:"பர்கூரில், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி, காது கேளாத குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது' என, ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சிறப்பு ஆசிரியர் அருண்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.
அவர்கள், வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஸ்ரீகாமாட்சி மகாலில், அனைவருக்கும் கல்வி இயக்கம், மெட்ராஸ் காது, மூக்கு தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பர்கூர் அரிமா சங்கம் சார்பாக, காது கேளாத குழந்தைகளுக்கு, இலவச காக்லியன் இம்ளாண்ட் சிகிச்சைக்கான பரிசோதனை முகாம், வரும், ஆகஸ்ட், 2ம் தேதி நடக்கிறது.
இந்த முகாமில், 6 வயதிற்குட்பட்ட, காதுகேளாத குழந்தைகள் இருந்தால், குழந்தையின் பிறப்பு சான்றிதழ், குழந்தையின் பெயருடனான ரேஷன் கார்டு, முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டை எடுத்து வர வேண்டும்.
காப்பீடு அட்டை இல்லாதவர்களும், முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும், வயது வரம்பின்றி இலவசமாக அனைவருக்கும் காது, மூக்கு, தொண்டை பரிசோதனை செய்யப்படும். எனவே, அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முகாமில் கலந்துகொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment