FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, July 5, 2015

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள்: டெல்லியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் முதலிடம்


புதுடெல்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், டெல்லியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இரா சிங்கால் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 4 இடங்களை, பெண்களே கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர். அரசுத் தேர்வுகளில், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு எனப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வுதான் (சிஎஸ்இ) மிகவும் கடினமானது என வர்ணிக்கப்படுகிறது. இது முதனிலை, மெயின் மற்றும் நேர்முக தேர்வு என்கிற 3 நிலைகளை கொண்டது. முதனிலை ஆகஸ்ட் மாதம் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்கள் டிசம்பரில் நடக்கும் ெமயின் ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதையடுத்து, ஏப்ரல் அல்லது மே மாதம் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில், காலியாக உள்ள 1364 பணியிடங்களை நடத்துவதற்காக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு நடத்தப்பட்டது.

இதற்காக நாடு முழுவதும் 59 மையங்களும், 2,137 இடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வை எழுதுவதற்கு 9.45 லட்சம்பேர் விண்ணப்பித்து இருந்த நிலையில், 4.51 லட்சம் பேர் மட்டுமே முதனிலை தேர்வை எழுதினார்கள். அதில், 16,933 வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மெயின் ேதர்வுக்கு அவர்கள் அழைக்கப்பட்டனர். கடந்த டிசம்பரில் நடந்த இந்த தேர்வில், 16,286 மட்டுமே பங்கேற்றனர். இதன் முடிவுகள் கடந்த மார்ச் 13ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, நேர்முகத் தேர்வுக்கு 3,308 பேர் அழைக்கப்பட்டனர். ஏப்ரல் 27ல் இருந்து ஜூன் 30ம் தேதி வரைக்கும், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், 3,303 பேர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேர்முகத் தேர்வு முடிவடைந்த நான்கு நாட்கள் மட்டுமே ஆன நிலையில், ேநற்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

பெண்கள் அசத்தல்: இதில் டெல்லியை சேர்ந்த பெண் மாற்றுத் திறனாளி இரா சிங்கால் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஐஆர்எஸ் அதிகாரியாக தற்போது பணியாற்றி வருகிறார். இரண்டாம் இடத்தை, கேரளாவை சேர்ந்த மருத்துவர் ரெனு ராஜும், மூன்றாம் இடத்தை டெல்லி ஐஆர்எஸ் அதிகாரி நிதி குப்தாவும் பிடித்துள்ளனர். டெல்லியை சேர்ந்த வந்தனா ராவ் 4ம் இடத்தை பிடித்தார். முதல் 4 இடங்களை பிடித்தவர்கள் அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 5வது இடத்தை ஐஆர்எஸ் அதிகாரி சுகர்ஷா பகத் பிடித்துள்ளார்.

எந்த வகுப்பு: தேர்வான 1,236 பேரில், 590 பேர் பொது வகுப்பையும், 354 பேர் ஓபிசி வகுப்பையும், 194 பேர் எஸ்சி, 98 பேர் எஸ்டி வகுப்பை சேர்ந்தவர்கள்.

என்ன பொறுப்பு: 1,236 பேரில் ஐஏஎஸ் பொறுப்புக்கு 180 பேர் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். ஐபிஎஸ் பொறுப்புக்கு 150 பேரும், ஐஎப்எஸ் பொறுப்புக்கு 32 பேரும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளார்கள். மத்திய அரசின் குரூப் ஏ பணிகளுக்காக 710 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ரயில்வே, பாதுகாப்பு அமைச்சகம், தபால் துறை, வருவாய் உள்ளிட்ட துறைகளில் பொறுப்பு வழங்கப்படும். குரூப் பி பணிகளுக்கு 292 பேருடைய பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவர்கள், யூனியன் பிரதேசங்களான டெல்லி, அந்தமான் நிகோபர் தீவுகள், டையு டாமன், தாத்ரா நாகர் ஹவேலி, பாண்டிச் சேரி ஆகிய இடங்களில் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். காலியாக உள்ள 1364 இடங்கள் நிரப்பட வேண்டும். இவற்றில், சிவில் சர்வீசஸ் ேதர்வின் மூலம் 1236 இடங்களும், பதவி உயர்வின் வழியே மீதம் உள்ள 128 இடங்களும் நிரப்பப்படும்.

பிரதமர் வாழ்த்து

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலிடம் பிடித்தது குறித்து, இரா சிங்கால் கூறுகையில், ‘மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். என்னால் இதனை நம்ப முடியவில்லை. மிகவும் தீவிரமாக எல்லாம் நான் படிக்கவில்லை. நான் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். மாற்றுத் திறனாளிகளுக்கு நான் ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என ஆசைப் படுகிறேன்’ என்றார். 2ம் இடம் பிடித்த ரெனு ராஜ் கூறும்போது, ‘மிக மிக மகழ்ச்சியாக உள்ளது. இந்த தேர்வுக்காக நான் ஓராண்டு காலமாக படித்தேன்’ என்றார். இவர் கேரள மாநிம் கொல்லம் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.

No comments:

Post a Comment