புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகத்தின் ஆண்டு பேரவை கூட்டம் 05/07/2015 அன்று மாலை 6 மணியளவில் ரெட்டியார்பாளையம் அஜீஸ் நகரில் உள்ள புதுச்சேரி காதுகேளாதோர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஆலோசகர் இரா.சரவணன் தலைமை தாங்கினார். புதிய நிர்வாகிகளாக தலைவர் ராஜேஸ், செயலாளராக பி.ஜி.பாலமுருகன் , பொருளாளராக மதன்மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
1. புதுச்சேரி அரசு 2008ல் அறிவித்த தேசிய அளவில் முதலிடம் பிடிக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை 5 லட்சம், 3 லட்சம், மற்றும் 2 லட்சம் இதுவரை தரவில்லை. பல மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் தங்கள் சொந்த செலவில் தான் முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு அரசு உடனடியாக அறிவித்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.
2. அனைத்து பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். காதுகேளாதோர்களுக்கான சிறப்பு ஆசிரியர்களையும் நியமிக்க வேண்டும்.
3. காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்க நிலநிற நம்பர் பிளேட் மற்றும் பெரிய அளவு சய்டு மிரர் அமைத்து டெல்லி உயர்நிதி மன்ற உத்தரவின் அடிப்படையில் ஓட்டுநர் உரிமம் வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இப்படிக்கு,
இரா.சரவணன்
ஆலோசகர்,
No comments:
Post a Comment