FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, July 13, 2015

கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை மந்திரி யு.டி.காதர் தகவல்

12.07.2015, மங்களூரு,
கர்நாடகத்தில் காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மந்திரி யு.டி.காதர் தெரிவித்தார்.

இலவச சிகிச்சை

இதுகுறித்து மாநில சுகாதாரத் துறை மந்திரி யு.டி.காதர் நேற்று மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கர்நாடகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட காதுகேளாத மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒரு நபருக்கு மாநில அரசு ரூ.1½ லட்சமும், மத்திய அரசு ரூ.3 லட்சமும் நிதி உதவி செய்கிறது.

இந்த சிகிச்சையை செய்ய மொத்தம் ரூ.15 லட்சம் வரை செலவாகும். இருப்பினும் கர்நாடக மாநிலத்தில் உள்ள சில தனியார் மருத்துவமனையினர் அரசுடன் இணைந்து இந்த சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.

120 குழந்தைகள் தேர்வு

முதற்கட்டமாக இந்த சிகிச்சைக்கு மாநிலம் முழுவதும் 120 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தட்சிணகன்னடா மாவட்டத்தில் மட்டும் 12 குழந்தைகளுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந்த குழந்தைகளுக்கு அடுத்த வாரம் முதல் தேவையான உபகரணங்கள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும்.

கர்நாடகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களில் 150 வாகனங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளது. அந்த ஆம்புலன்ஸ்களுக்கு பதில் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆம்புலன்ஸ்கள் ஆகஸ்டு முதல் வாரத்தில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி எதிர்க்கட்சியினர் எனது அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். அது சரியல்ல. அதுபற்றி சட்டசபை கூட்டத்தொடரில் அவர்கள் விவாதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment