ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை.7–
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் உள்ள பி. எட் ஸ்பெஷல் பிரிவிற்கு டெல்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சில் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.துணை வேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்பொழுது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் கலை மற்றும் அறிவியல் படிப்பதிலும் அதனை படித்தவர்கள் பி.எட் படித்து ஆசிரியர் பணிக்கு செல்வதை காணமுடிகிறது.
எனவே கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் துவங்கப் பட்டுள்ள பி.எட் படிப்பு ஒரு பி.எட் சிறப்புபிரிவாகும். அதாவது இங்கு பி.எட் படித்தவர்கள் காதுகேளாத, வாய்பேசாத மாணவர்களுக்கும் மற்றும் ஏற்கனவே உள்ள பி.எட் ஆசிரியர்களைப் போலவும் பணியாற்ற சிறப்பு பயிற்சி அளிப்பதால் இந்தியாவில் எங்கு சென்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
இதுவரை பி.எட் சிறப்பு பயிற்சி முடித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அனைவரும் அதிக ஊதியத்தில் பணிக்கு சென்றுள்ளார்கள்.
மேலும் புது டில்லியில் உள்ள மத்திய மாற்றுத்திறனாளி மறுமலர்ச்சி கவுன்சிலின்கீழ் இந்தியாவில் மொத்தம் 447 பி.எட் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அங்கீகாரம் பெற்று செயல் படுகின்றன என்று அறிக்கை வெளியிட்டுள்ளது .மேலும் இதில் தமிழ் நாட்டில் 40 இடங்களில், கலசலிங்கம் பல்கலைக்கழக பி.எட் சிறப்பு பெயர் இடம்பெற்று பாராட்டப்பெற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு அங்கீகாரம்பெற்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 7 மாணவ மாணவிகளுக்கு பல்கலைக் கழகத்திலேயே கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்துள்ளது என்று துணை வேந்தர் தனது அறிக்கையில் கூறினார்.
இந்த பி.எட் சிறப்பு பயிற்சி 2 ஆண்டு படிப்பாகும். இதில் 2ம் ஆண்டு சென்னையில் உள்ள சிறப்பு பள்ளிகளில் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று துறைத் தலைவர் முனைவர் வெங்கடேசலு கூறினார்.
No comments:
Post a Comment