FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Monday, July 13, 2015

'அனாதை' என்றால்தான் உதவித்தொகையா? அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் 11.07.2015 அன்று திருநெல்வேலியில் மாநில தலைவர் பா.ஜான்சிராணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே உதவித்தொகை வழங்க வேண்டுமெனவும், கடும் விதிமுறைகளை ரத்து செய்து அடையாள சான்று வழங்கப்படும் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும் எமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு, பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகிறது. கடந்த மார்ச் 24,25 தேதிகளில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி 3000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இரவு பகல் என 30 மணி நேரம் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர். போராட்டத்தையொட்டி 25.03.2015 அன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்த சமூகநலத்துறை அமைச்சர் மாற்றுத்திறனாளி நலத்துறை செயலாளர் மற்றும் ஆணையர் முன்னிலையில் கடும் விதிமுறைகளை ரத்து செய்ய வேண்டுமென்ற கோரிக்கைகள் நியாயமானது என சொல்லி, அவைகளை ஏற்பதாக தெரிவித்தார். கடைப்பிடிக்கப்படும் கடும் விதிமுறைகளை உடனடியாக ரத்து செய்ய உடனடி நடவடிக்கையை மேற்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.

இந்நிலையில் 17.4.2015 தேதியிட்டு சமூகநலத்துறை அரசாணை எண்.26-ஐ வெளியிட்டுள்ளது. உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5000 இருக்க வேண்டும் போன்ற காலத்திற்கு ஒவ்வாத பழைய விதிகளை ரத்து செய்வதாகவும், புதிய எளிமையான விதிகளை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது. அதில், முதல் விதியாக 'அனாதை'யாக இருக்க வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் தலையில் இடியை இறக்குவதுபோல தெரிவித்துள்ளது. மத்திய அரசின் உதவியோடு வழங்கப்படும் இந்திரா காந்தி ஊனமுற்றோர் உதவித்தொகைக்கும், தமிழக அரசின் முழுமையான நிதியின் மூலம் வழங்கப்படும் இரு திட்டங்களுக்கும் 'அனாதை'யாக இருக்க வேண்டமென அரசாணையில் சொல்லியிருப்பது மாற்றுத்திறனாளிகளை பெரும் ஆத்திரம் அடைய செய்துள்ளது.

இது சம்பந்தமாக தமிழக முதலமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எமது சங்கத்தின் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உதவித்தொகை பெறுவதற்கு 'அனாதை'யாக இருக்க வேண்டுமென கூறியுள்ள விதி மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த விதத்தலும் பொருந்தாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதோடு, மாற்றுத்திறனாளி விரோத இந்த அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென எமது சங்கம் வலியுறுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளி நலத்துறை மூலமே மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசாணையை எரிக்கும் போராட்டத்தை நடத்துவோம்
அரசாணையை திரும்ப பெறாவிட்டால் மாநிலம் முழுவதும் மேற்கண்ட அரசாணை நகலை எரிக்கும் போராட்டத்தை எமது சங்கம் நடத்தும் எனவும் இதன் மூலம் எச்சரிக்க விரும்புகிறோம்.




No comments:

Post a Comment