03.05.2017
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மே 22 முதல் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாற்றுத்திறனுடையோர் சங்கங் களின் கூட்டு இயக்கம் அறிவித் துள்ளது.
இது தொடர்பாக அந்த இயக்கத்தைச் சேர்ந்த டி.எம்.என்.தீபக், பி.ஜான்சிராணி ஆகியோர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
மற்ற மாநிலங்களில் உள்ளது போல தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 40 சதவீத ஊனம் இருந்தாலே நிபந்தனைகள் ஏதுமின்றி உதவித்தொகை வழங்கக் கோரி கடந்த ஆண்டு போராட்டங்களை நடத்தினோம். அதன் விளைவாக கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அந்த அரசாணையில் 40 சத வீதம் ஊனம் உள்ள வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என குறிப்பிடப் பட்டிருந்தது. இருப்பினும், சிறு சிறு நிரந்தரமற்ற வேலைகளை செய்து சொற்ப வருமானம் பெறும் வேலையைக் கூட காரணம் காட்டி உதவித்தொகை கிடைப்பதை அதிகாரிகள் தடுத்து வந்தனர்.
எனவே, அந்த அரசாணையில் வேலை என்பதை நிரந்தர அரசு வேலை மட்டுமே என பொருள்படும்படி திருத்தம் தேவை என அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம். இந்த திருத் தத்தை மேற்கொள்வதாக அதி காரிகள் தெரிவித்தனர். எனினும், இதுநாள்வரை அரசாணையை மதிக்காமல் மாற்றுத்திறனாளி களுக்கு உதவித்தொகை கிடைக் காமல் முட்டுக்கட்டை போட்டு வரும் அவல நிலையே நீடிக்கிறது. இதனால், ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் அலைக் கழிக்கப்படுகின்றனர்.
எனவே, அந்த அரசாணையில் வேலை என்பதை நிரந்த அரசு வேலை மட்டுமே என திருத்தம் செய்து 40 சதவீத ஊனமுள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும்.
மேலும், 75 சதவீதத்துக்கும் மேல் பாதித்த பார்வையற்றோர், காது கேளாதோர் உள்ளிட்டோருக் கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சென்னை யில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்தில் வரும் மே 22-ம் தேதி முதல் தொடர் முற்றுகை போராட்டத்தை நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment