FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Saturday, May 13, 2017

காது கேளாதோர் பள்ளி தாளாளர் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

13.05.2017
கோவை மாவட்டம் கோதபாளையத்தில் உள்ள காது கேளாதோர் பள்ளியின் தாளாளராக இருப்பவர் முருகசாமி. சிறு வயதில் இருந்தே காது கேளாமல், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருக்கும் முருகசாமி பல்வேறு இன்னல்களுக்கு இடையே கடந்த 1997-ஆம் ஆண்டு இப்பள்ளியை ஆரம்பித்தார். 7-ஆம் வகுப்பு வரை மட்டுமே இருந்த இந்த பள்ளியை பின்னர் 12-ஆம் வகுப்பு வரை தரம் உயர்த்திய முருகசாமியின் முயற்சியில், தற்போது 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்றுவருகின்றனர். கல்வி மட்டுமின்றி விளையாட்டிலும் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

இதே பள்ளியில் கடந்த 2012 - 13-ஆம் ஆண்டில் படித்த மாணவி ஒருவர், பள்ளியின் தாளாளர் முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிர்ச்சியூட்டும் புகாரை தெரிவித்துள்ளார். தற்போது திருமணமாகி தனது கணவருடன் வாழ்ந்துவரும் அந்த பெண் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். தான் படிக்கும் போது முருகசாமி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததால் கர்ப்பம் அடைந்ததாகக் கூறும் பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முருகசாமி தன் கருவை கலைத்ததாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முருகசாமி தன்னை மிரட்டியதால் அப்போது இது குறித்து முன்பு வெளியில் கூறவில்லை என்றும் தற்போது அங்கு படிக்கும் மாணவிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். 

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரம்யா பாரதி உத்தரவின்பேரில் கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் முருகசாமி மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதே போல, குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பள்ளி மேற்பார்வையாளரான சித்ரா தேவி, வார்டன் பரிமளா, மாற்றுத்திறனாளி பெண்ணான ரேவதி மற்றும் ரேவதியின் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான மற்றொரு மேற்பார்வையாளரான ராணியை போலீசார் தேடிவருகின்றனர். 12-ஆம் வகுப்பு முடிந்து கல்லூரிக்கு செல்லவுள்ள சிலர் பள்ளி விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காது கேளாதோர் பள்ளி நிர்வாக தரப்பு இது பொய்ப் புகார் எனவும் சட்டப்படி இதனை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. இந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், காவல்துறையினர் வந்து செல்வது அச்சமூட்டும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். புகார் கொடுத்த பெண் பள்ளியில் படித்தபோது செய்த தவறுகளுக்காக நடவடிக்கை எடுத்ததால் முருகசாமி மீது அவர் பொய் புகார் அளித்துள்ளதாக அந்த பள்ளி மாணவிகள் கூறுகின்றனர்.

கோதபாளையாம் காது கேளாதோர் பள்ளியின் தாளாளர் மீதான பாலியல் வன்கொடுமை புகரால் அந்த பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் போலீசார் இந்த விவகாரத்தில் விரைவில் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment