கோவை சோமனூர் அடுத்த கோதபாளையத்தில் உள்ள திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பள்ளியின் தாளாளர் உட்பட 5 பேரை போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை சோமனூர் அடுத்த கோதபாளையத்தில் ‘’திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி’’ உள்ளது. பள்ளியின் தாளாளர் முருகசாமி(57). இந்நிலையில், இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவி மற்றும் தற்போது பள்ளியில் நிர்வாக பணிகள் கவனித்து வருபவர் வாய்பேச முடியாத சவுமியா (பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வாய்பேச முடியாத ஒருவருடன் திருமணமாகியுள்ளது. இந்நிலையில், சவுமியா கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் நேற்று தன் கணவருடன் வந்து புகார் அளித்தார். புகாரில், ‘2012-14 ஆண்டுகளில் கோதபாளையம் காதுகேளாதோர் பள்ளியில் படித்த போது பள்ளியின் தாளாளர் முருகசாமி பல முறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். இதில், நான் கர்ப்பமானேன். ஆறு மாத கர்ப்பிணியான என்னை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வீட்டில் மருத்துவர் ஒருவரின் உதவியுடன் கருகலைப்பு செய்தார். மேலும், தற்போதும் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை அளித்து வருகிறார்’ என தெரிவித்து இருந்தார்.
மேலும், இவருடன் முன்னாள் மாணவி மற்றும் தற்போது அதே பள்ளியில் பணியாற்றி வரும் 21 வயதான இளம் பெண் ஒருவரும் பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது பாலியல் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், பள்ளியின் தாளாளர் முருகசாமி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவருக்கு உதவி செய்த பள்ளியின் துப்புரவு தொழிலாளி சித்ராதேவி(40), பயிற்றுனர்கள் பிரமிளா(28), ரேவதி(30), பாபு (35) ஆகிய 5 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
பள்ளியில் படிக்கும் மற்ற மாணவிகளும் பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதால் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக விசாரிக்க மாவட்ட மாற்றுத்திறனாளி பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகரனுக்கு எஸ்.பி. ரம்யா பாரதி அறிவுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment