17.05.2017 கோத்தகிரி : கோத்தகிரி ஆதிவாசி நலச்சங்கம் (நாவா) மற்றும் மத்திய அரசின் காதுகேளாதோர் பாதுகாப்பு துறை சார்பில், காதுகேளாதோருக்கான சிறப்பு முகாம் நாவா வளாகத்தில் நடந்தது.நாவா செயலாளர் ஆல்வாஸ், தலைவர் முத்துலட்சுமி ஆகியோர், முகாமை துவக்கி வைத்தனர்.தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஹரிபிரசாத் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோர், காதுகேளாதோரை பரிசோதனை செய்தனர். கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள ஆதிவாசி மக்கள் உட்பட, பொதுமக்கள், 50 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, இரண்டு காதுகேட்கும் கருவிகள் மற்றும் ஒரு ஆண்டுக்கான பேட்டரி வழங்கப்பட்டன. மேலும், காதுகேளாத குழந்தைகளை ஆரம்பத்திலேயே பரிசோதித்து, அதற்கான சிகிச்சை மற்றும் பயிற்சி அளித்தால், காதுகேளாத குறையை தடுக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டது.தவிர, கடந்த ஆண்டு, மாவட்ட ஊனமுற்றோர் அலுவலகத்தில் இருந்து, சான்றிதழ் பெற்றுவருபவர்களுக்கு, இத்திட்டம் மூலம், தேவையான சிகிச்சை அளித்து கருவிகளும், ஊனமுற்றோருக்கு, ஊன்று கோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கவும் 'நாவா' நிறுவனம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில், நாவா கல்வி இயக்குனர் விஜயகுமார், திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி உட்பட, திரளான பயனாளிகள் பங்கேற்றனர்.---
No comments:
Post a Comment