17.05.2017
தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு எந்த குறையும் இருக்கக் கூடாது என்று தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், உலகநாயகன் கமல்ஹாசன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோர் உள்பட பலர் மாற்றுத்திறனாளிகளாக நடித்தால் அதனை ஆவலுடன் பார்ப்பார்கள். அதன் பிறகு ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் யாரும் மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு நிகராக ஹீரோயின்கள் மாற்றுத்திறனாளி வேடத்தில் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கின்றனர். அந்தவகையில் நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா காது கேளாதவராக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார். இப்படத்தைத் தொடர்ந்து கொலையுதிர் காலம் படத்திலும், காது கேளாத, வாய் பேச முடியாத ஹீரோயினாக நடிக்கிறார்.
இவரைத் தொடர்ந்து தற்போது ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் பிருந்தாவனம் படத்தில் காது கேளாதவர் வேடத்தில் அருள் நிதி நடிக்கிறார். இவர்களைத் தொடர்ந்து தற்போது இளம் ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் இதுபோன்ற மாற்றுத்திறனாளி வேடங்கள் கொண்ட கதைகள் இருந்தால் சொல்லுங்கள் என்று இயக்குனர்களை தொந்தரவு செய்கிறார்களாம்.

No comments:
Post a Comment