11.05.2017
அமெரிக்காவின் ஹவாயி மாநில விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட செவிப்புலன் குறைந்த மாதுக்கு சைகை மொழி உரைபெயர்ப்பாளரை நியமிக்க விமான நிலைய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
தமது காதலரைச் சந்திக்க ஹானலூலு சென்ற அந்த மாதை, விசாரணைக்காக,அதிகாரிகள் தடுத்துவைத்தனர்.
முன்பு அமெரிக்காவில் அனைத்துலக மாணவராக இருந்தது குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஜப்பானிய சைகை மொழியைப் பயன்படுத்தும் அவர் ஆங்கில சைகை மொழி உரைபெயர்ப்பாளர் ஒருவரை நியமிக்க அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஆனால் அவ்வாறு ஒருவரை வழங்க அதிகாரிகள் மறுத்தனர்.
அதனால் மாது சிரமப்பட்டு உதட்டு அசைவுகளுடன், ஆங்கிலத்தில் எழுதி அதிகாரிகளிடம் உரையாட வேண்டியிருந்தது.
அதன் பின்னர், காரணமில்லாமல், கையில் விலங்கிட்டு அவரைத் தடுப்புக் காவலில் வைத்தனர்.
இதனால் எவ்வித சைகை மொழியைக் கொண்டும் மாதுவால் உரையாட முடியவில்லை.
அதிகாரிகள் அவரது கைபேசியையும் பறிமுதல் செய்தனர்.
இதனால் தமது நிலைமை குறித்து விமான நிலையத்தில் அவருக்காகக் காத்திருந்த காதலருக்கும் தெரிவிக்க முடியவில்லை.
அதற்கு பதிலாக காது கேளாத அவரைத் தொலைபேசியில் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளருடன்பேச வைத்தனர் அதிகாரிகள்.
இவ்வாறு தமது உடற்குறைகளைக் கருத்தில் கொள்ளாமல் தமக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதாகவும் தம்மை அவமானப்படுத்தியதாகவும் அதிகாரிகளுக்கு எதிராக அவர் புகார் செய்துள்ளார்.
மறுநாள் விடுவிக்கப்பட்ட அவர் மீண்டும் ஜப்பான் திரும்பியுள்ளார்.

No comments:
Post a Comment