கண் பார்வையற்றவர்கள், காதுகேளாதவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க உதவும் புதிய தொழில்நுட்பத்தை ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கண் பார்வை இல்லாதவர்கள் எழுத்துக்களைப் படிக்க, விரல்களால் தொட்டு உணரும் பிரெய்லி முறை உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக, பார்வையற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி பார்க்க வசதியாக புதிய தொழில்நுட்பத்தை ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
இதன்படி, டி.வி.யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் வரிவடிவங்கள், பிரெய்லி முறைக்கு மாற்றப்பட்டு, ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்புக்கு அனுப்பப்படும். இந்த தொகுப்பு பிரத்யேக செயலியின் மூலம் விரல்களால் தொட்டு படித்துக் கொண்டே, கண்பார்யைற்றவர்களும், காதுகேளாதவர்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசிக்க முடியும்.
ஸ்பெயினில் மேட்ரிட் ((Madrid)) நகரில் உள்ள சேனல்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள இந்த தொழில்நுட்பம், பிற சேனல்களுக்கும் நடைமுறைக்கு வர உள்ளது.
No comments:
Post a Comment