05.05.2017
பெரோஸ்பூர்,
பாகிஸ்தான் நாட்டில் அணியப்படும் குர்தா ஆடை மற்றும் அந்நாட்டின் 20 ரூபாய் நோட்டுடன் அந்த சிறுவன் காணப்பட்டுள்ளான்.
பஞ்சாபின் பேரியார் பகுதிக்குள் நுழைந்த 12 வயது சிறுவனை கைது செய்த எல்லை பாதுகாப்பு படையினர் அவன் மீது வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். இதுபற்றி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, அந்த சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்து விட்டான் என தெரிகிறது.
அடுத்த கட்ட நடவடிக்கையாக பஞ்சாப் போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டு உள்ளான் என கூறியுள்ளார். பஞ்சாபின் பரீத்கோட் பகுதியில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவர்களுக்கான பள்ளி ஆசிரியர் ஒருவரின் உதவியுடன் சிறுவனின் அடையாளம் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment